Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தலைக்கு எண்ணெய் வைக்கும்போது கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை என்னென்ன?
பொதுவாக எல்லோரும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உங்கள் தலைமுடிக்கு சரியான கவனிப்பும் அக்கறையும் தேவை.. எண்ணெய் சிகிச்சை என்பது கவனிப்பில் ஒரு சிறந்த தீர்வாகும். ஹாட் ஆயில் தெரபி முடியை முன்னெப்போதும் இல்லாத வகையில் பளபளப்பாக்கும். ஆனால் முடி சற்று உதிரும்..
அதனால் சூடான ஆயிலை முடியில் அப்ளை பண்ணக்கூடாது.. தலைமுடி ஈரமாக இருக்கும் போதும் ஆயில் அப்பளை பண்ணக்கூடாது.. அப்புறம் எப்போது, எப்படி, தலைமுடியில் எண்ணெயை அப்ளை செய்ய வேண்டும்? அப்படி அப்பளை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்றுதானே கேட்கிறீர்கள்..? வாங்க அது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

1. தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம். அதனால் அவற்றை கவனமாக செய்து வந்தாலே போதும் முடிக் கொட்டுவதை தவிர்க்கலாம்..
2. அதில் முதலாவதாக, முடிக்கு சூடான எண்ணெய்யை எப்போதும் பயன்படுத்த கூடாது. இவற்றை பயன்படுத்தினால் முடியில் பொடுகு பிரச்சனை வரும்.. அதுமட்டுமல்லாமல் தலையில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.. எனவே முடி சேதமடையாமல் இருக்க சூடான எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..
3. பின்னர் மிக முக்கியமான விஷயம், தலைக்கு குளித்து விட்டு ஈரமான முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது இல்லை. ஈரமான முடியில் கை வைத்தாலே, பலருக்கும் முடி உதிர்வு ஏற்படும். எனவே ஈரமான முடியில் எண்ணெய் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
4. தலைக்கு எண்ணெய் வைத்திருக்கும்போது முடியை இருக்கமாக கட்டி கிளிப் அல்லது கொண்டை போன்றவற்றை போட வேண்டாம். இதனால் முடி உதிர்வு அல்லது ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படும். முடிக்கு எண்ணெய் வைக்கும் போது முடிந்தவரை அப்படியே விடுவது நல்லதாக இருக்கும்..
5. கண்டிப்பாக இரவு தூங்கும் முன்பு முடிக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். இதன் காரணமாக முகப்பரு, கண்களில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம். எனவே ஷாம்பு போடுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு தலைமுடிக்கு எண்ணெய் வைக்கலாம்.. அதுபோலவே காலையிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு நீண்ட நேரம் அப்படியே விட்டுவிடக்கூடாது.. அப்படியே தலைக்கு குளிக்க பிளான் இல்லை என்றால் கொஞ்சமாக எண்ணெய் வைத்தாலே போதுமானது..
6. மேலும் முடிக்கு அதிகமாக எண்ணை தடவ கூடாது. அதிகமாக தடவும் போது அழுக்கு படிந்து, முடியை க்ரீஸ் போல மாற்றுகிறது. உச்சந்தலை மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு சிறிது அளவு எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. எனவே, முடிக்கு எண்ணெய் வைக்கும் போது கம்மியான அளவில் வைப்பதை நினைவில் கொள்ளவும். அப்படி அதிகமாக வைத்தால் 2 அல்லது 3 மணிநேரம் கழித்து தலைக்கு குளித்து விடுவது நல்லது..



Click it and Unblock the Notifications