Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஸ்டிக்கர் பொட்டு, குங்குமம் பயன்படுத்தி அழற்சி ஆயிடுச்சா? இதோ அதை சரிசெய்யும் சில வழிகள்!
Bindi Allergy In Tamil: சரும அழற்சி என்பது எல்லாருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இருப்பினும் சிலருக்கு சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சரும அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு அல்லது குங்குமம் பயன்படுத்தும் போது நெற்றியில் சரும அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் நெற்றிப் பொட்டு இடத்தில் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும். சிலருக்கு இது மாறாத தழும்பாக கூட மாறிட வாய்ப்புள்ளது. இன்றைய காலங்களில் வரும் குங்குமம் மற்றும் சந்தனம் போன்றவற்றில் நிறத்தை அதிகரிக்கும் சாயங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த சாயங்கள் மென்மையான தோலில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.

அதே மாதிரி ஸ்டிக்கர் பொட்டு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பசைகள் நெற்றியில் அழற்சியை உண்டாக்குகிறது. சரி வாங்க நெற்றியில் பொட்டு வைப்பதால் ஏற்படும் சரும அழற்சியை நாம் எப்படி போக்கலாம் என அறிந்து கொள்வோம்.
பொட்டு அழற்சி ஏற்படக் காரணங்கள்
நீண்ட நாட்களாக ஒரே ஸ்டிக்கர் பொட்டை நீங்கள் பயன்படுத்தும் போது பொட்டு அழற்சி ஏற்படலாம். ஸ்டிக்கர் பொட்டில் பயன்படுத்தப்படும் பாரா டெர்ஷியரி பியூட்டில் ஃபீனால் ஃபார்மால்டிஹைடு (PTBP) போன்ற கடுமையான இராசயனங்கள் உணர்திறன் வாய்ந்த தோலில் சரும அழற்சியை உண்டாக்குகிறது. சிலருக்கு பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பு மற்றும் சரும அழற்சி ஏற்படுகிறது. சிலருக்கு அந்தப் பகுதி வெண்மையாக மாற வாய்ப்பு உள்ளது.
பொட்டு அழற்சியை போக்க ஆயுர்வேத சிகிச்சை முறைகள்
பொட்டு அழற்சி இருப்பவர்கள் முதலில் அந்த அழற்சியை ஏற்படுத்தும் பொட்டை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை வாங்கி பயன்படுத்துவது நல்லது. குங்குமத்தை வாசலின் உடன் சேர்த்து பயன்படுத்துவது நல்லது. இது அழற்சியை வேகமாக போக்க உதவுகிறது. மேலும் பொட்டு அழற்சியை போக்க சில எளிய வீட்டு வைத்திய முறைகளை வீட்டிலேயே செய்யலாம்.
தேன் மெழுகு மற்றும் துளசி
நெற்றியில் பொட்டு அழற்சி ஏற்பட்ட இடத்தில் தேன் மெழுகு மற்றும் துளசி சேர்த்து அந்த இடத்தில் தடவலாம். இந்த கலவையை பொட்டு வைக்கும் இடத்தில் தடவி விட்டு அப்புறமாக பொட்டு வைப்பது நல்லது.
மஞ்சள் மற்றும் வேம்பு
மஞ்சள் மற்றும் வேம்பு இரண்டுமே அழற்சி எதிர்ப்பு குணங்களை கொண்டுள்ளது. 2 கப் தண்ணீரில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து 1 தேக்கரண்டி வேப்பம் பூ சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீரைக் கொண்டு அழற்சி ஏற்பட்ட இடத்தை ஒரு நாளைக்கு 4-5 முறை கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் நிறைய சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்து அழற்சி ஏற்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். கொஞ்ச நாளில் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள அழற்சி நீங்கி விடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் எரிச்சல், சிவத்தல் மற்றும் அரிப்பு போன்ற உணர்வுகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து நெற்றியில் அழற்சி உள்ள இடத்தில் தடவலாம். மேலும் கற்றாழை ஜெல்லை கொண்டு ஐஸ் கட்டிகளை உருவாக்கி அந்த ஐஸ் கட்டிகளை கொண்டு அழற்சி ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
துளசி இலைகள்
துளசி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து அதை நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்து பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது ஒவ்வாமையின் அழற்சி மற்றும் எரிச்சலை போக்க உதவுகிறது.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீரில் நீர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பஞ்சை எடுத்து நனைத்து அதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். 10-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சிடார் வினிகரை தண்ணீருடன் கலந்து நீர்த்து போக செய்யுங்கள். பிறகு அந்த தண்ணீரை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள். இதிலுள்ள அசிட்டிக் அமிலம் அரிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சை மற்றும் தேன் இரண்டிலுமே சரும அழற்சியை போக்கும் பண்புகள் உள்ளன. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications