Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தலைக்கு ஹென்னா போட்டா சளி பிடிக்கும்-ன்னு பயப்படுறீங்களா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..
குளிர்காலத்தில் ஹென்னாவை தலைக்கு போட வேண்டுமானால், சளி பிடிக்காமல் இருக்க ஹென்னாவை பயன்படுத்தும் சில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால் குளிர்காலத்தில் ஹென்னாவால் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
இன்று பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. நரைமுடி ஒருவருக்கு முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. எனவே நரைமுடியை மறைக்க பெரும்பாலானோர் தங்களின் முடியை கலரிங் செய்கிறார்கள். அதில் நிறைய பேர் இயற்கை வழியை பின்பற்றுகிறார்கள். அதாவது தலைமுடிக்கு ஹென்னா என்னும் மருதாணி பொடியை பயன்படுத்தி வருகிறார்கள். நரைத்த முடிக்கு ஒரு நல்ல மற்றும் இயற்கையான நிறத்தை ஹென்னா வழங்குகிறது. நரைமுடியை மறைக்க ஹென்னாவை பயன்படுத்துவோர், அவ்வப்போது தங்கள் முடிக்கு ஹென்னாவை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஹென்னா இயற்கையாகவே குளிர்ச்சியானது. எனவே பலரும் குளிர்காலத்தில் ஹென்னாவை தலைக்கு போட பயம் கொள்வார்கள். ஏனெனில் குளிர்காலத்தில் குளிர்ச்சியான ஹென்னாவை பயன்படுத்தினால் சளி, இருமல் பிடித்து மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் குளிர்காலத்தில் ஹென்னாவை தலைக்கு போட வேண்டுமானால், சளி பிடிக்காமல் இருக்க ஹென்னாவை பயன்படுத்தும் சில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால் குளிர்காலத்தில் ஹென்னாவால் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம்.

டிப்ஸ் #1
ஹென்னா குளிர்ச்சியானது என்பதால் குளிர்காலத்தில் இவற்றைப் பயன்படுத்துவது சற்று ஆபத்தானது தான். ஆனால் குளிர்காலத்தில் ஹென்னாவால் சளி பிடிக்காமல் இருக்க, ஹென்னா பேஸ்ட்டை ஊற வைக்கும் போது, அதில் 2-3 கிராம்புகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சளி மற்றும் இருமல் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

டிப்ஸ் #2
குளிர்காலத்தில் உங்களுக்கு ஏற்கனவே சளி தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், ஹென்னாவில் எண்ணெய், தேநீர், மாங்காய் பொடி, மாங்காய் ஜூஸ், பட்டை தூள், காபி டிகாஷன் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம்.

டிப்ஸ் #3
குளிர்காலத்தில் ஹென்னாவை பயன்படுத்தும் போது, அந்த பேஸ்ட்டில் சிறிது கற்பூரம் மற்றும் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் தலைமுடியில் நீண்ட நாள் ஹென்னாவின் நிறம் நிலைத்திருக்கும்.

டிப்ஸ் #4
குளிர்காலத்தில் ஹென்னாவை பயன்படுத்தும் போது, அத்துடன் 2 ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸை சேர்த்து, தலைமுடிக்கு தடவ வேண்டும். பின் தலைமுடி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தாமல் அலச வேண்டும். இதனால் தலைமுடி நன்கு வலிமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications