Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
உங்க தலைமுடி டைப்க்கு ஏத்த பெஸ்ட் ஷாம்பூ எதுனு தெரியனுமா? இத படிங்க..!
முடியில் பல வகைகள் உள்ளன. உடைந்த கூந்தல், அடர்ந்த முடி, சுருட்டை முடி, அடர்த்தி குறைந்த கூந்தல் என பல ரகங்கள் உண்டு. இவற்றில் ஒவ்வொரு விதமான கூந்தலுக்கும் பொருந்தும் சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன
நம்மில் பெரும்பாலுமான நபர்கள் தனது தலைமுடியைப் பற்றி கவலைப்பட்டே மனதில் பாரத்தை சுமந்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இந்த வருத்தத்திற்கு என்ன காரணம் என்று யோசித்தால், அது தலைமுடி உதிர்வு பிரச்சனை, பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை, உடைந்த முடி, குன்றிய வளர்ச்சி என பல காரணங்கள் மனதில் விடையாக வந்து போகின்றன.

இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று சிந்தித்தால், சில விடைகள் கிடைக்கும். அவையாவன: நல்ல ஷாம்பூ, சிறந்த எண்ணெய், சரியான கண்டிஷனர், சரியான - தொடர்ந்த கூந்தல் பராமரிப்பு. இத்தனை விடைகளாக அமைந்த விஷயங்களில் மிக முக்கியமானதாக இருப்பது ஷாம்பூ. ஏனெனில் சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுத்துவிட்டாலே முக்கால் பகுதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.
அந்த வகையில் உங்கள் தலைமுடியின் வகைக்கு ஏற்ற வகையில் சிறந்த ஷாம்பூவை தேர்ந்தெடுப்பது எப்படி என இந்த பதிப்பில், இப்பொழுது காணலாம்.

ஷாம்பூவை தேர்ந்தெடுக்கும் விதம்:
இன்றைய கால கட்டத்தில், அழகான பாட்டில், கண்ணைப் பறிக்கும் ஸ்டிக்கர், நமக்கு பிடித்தமான நடிகர் நடித்து - விளம்பரம் மூலமாக பரிந்துரைக்கும் ஷாம்பூ என்று பார்த்து நாம் ஷாம்பூவை வாங்குகிறோம். இந்த தேவையில்லா விஷயங்களை கவனித்து, முக்கியமாக கவனிக்க வேண்டிய ஷாம்பூவின் மூலக்கூறுகள் என்னென்ன என்பது குறித்த தகவலை படித்துப் பார்க்காது விட்டுவிடுகிறோம். ஆகையால், ஷாம்பூ வாங்குமுன் என்னென்ன பொருள்களை பயன்படுத்தி அதை தயாரித்து உள்ளனர் என்று கண்டறிந்து பின் வாங்கி பயன்படுத்தவும்.

முடியின் வகைகள்:
முடியில் பல வகைகள் உள்ளன. உடைந்த கூந்தல், அடர்ந்த முடி, சுருட்டை முடி, அடர்த்தி குறைந்த கூந்தல் என பல ரகங்கள் உண்டு. இவற்றில் ஒவ்வொரு விதமான கூந்தலுக்கும் பொருந்தும் சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் அவசியம். ஒவ்வொரு கூந்தல் ரகத்திற்கும் ஏற்ற பெஸ்ட் ஷாம்பூ எது என்று பார்க்கலாம் வாருங்கள்!

அடர்த்தி குறைந்த கூந்தலுக்கான ஷாம்பூ:
அடர்த்தி குறைந்த கூந்தலை கொண்டவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஷாம்பூ எது என்று பார்த்தால், கூந்தலை அடர்த்தியாக்க உதவும் புரோட்டின் மற்றும் பாலிமர்கள் கொண்ட ஷாம்பூவை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஷாம்பூவின் முக்கிய மூலக்கூறாக மரைன் கொலாஜென் எனும் பொருள் இருக்கும்; இது கூந்தலை அடர்த்தியாக்க உதவும். இவ்வித குணம் மற்றும் மூலக்கூறுகள் கொண்ட ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதால், எளிதில் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

உடைந்த முடிக்கான ஷாம்பூ:
உடைந்த கூந்தல் ஒரு காய்ந்த புல் போன்று முடியின் இறுதியில் பிளவுபட்டு காணப்படும். எந்த சூழல் ஆனாலும், எக்காலமானாலும் இதன் தன்மை மாறாது இருக்கும். இவ்வித முடிக்கு அதிக ஈரப்பதம் கொண்ட, முடியை நன்கு ஈரப்பதத்துடன் வைக்கும் ஷாம்பூ தேவை. அப்படி ஈரப்பதம் கொண்ட ஷாம்பூ எண்ணெய், ஷியா வெண்ணெய் போன்ற மூலக்கூறுகளை கொண்டிருத்தல் அவசியம்; இந்த மூலக்கூறுகள் ஷாம்பூவில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே, முடியை ஈரப்பதம் கொண்டதாகி மாற்றி கூந்தல் உடைவதை தடுக்க முடியும்.

நிறம் கொண்ட முடிக்கான ஷாம்பூ:
கூந்தல் கருப்பு நிறமாக, பிரௌன் நிறமாக அல்லது நிறம் குறைந்தோ கூடியோ இருந்தால், உங்கள் கூந்தலை சரியான மெலனின் அளவு கொண்டதாக மாற்றும் ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் வேண்டும். இந்த விதமான ஷாம்பூ முடியின் நிறத்தை மாற்றாததாக, இருக்கும் நிறத்தை காப்பதாக இருக்கும்; முடியின் ஆழம் வரை சென்று நிறமிழப்பை தடுக்கும்.

எண்ணெய்ப்பசை கொண்ட முடிக்கான ஷாம்பூ:
எண்ணெய்ப்பசை மற்றும் அடர்த்தி குறைந்த கொண்ட, அதிக சீபம் வெளிப்படுத்தும் கூந்தலுக்கு, கற்றாழை, காட்டன், மூலிகைகள் போன்ற மூலப்பொருட்களை கொண்ட முடியின் தன்மையை பாதுகாக்கும் குணம் கொண்ட ஷாம்பூவை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு சரியாக தேர்ந்தெடுப்பது முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

பழுப்பு நிற கூந்தலுக்கான ஷாம்பூ:
இந்த வகை கூந்தல் ஒல்லியாக, அதிக சென்சிட்டிவாக இருக்கும். இந்த வகை கூந்தல் கொண்டவர்களுக்கு என்றே ஒரு சிறப்பான ஷாம்பூ தயாரிக்கப்பட்டு, சந்தைகளில் விற்கப்படுகிறது. இந்த ஷாம்பூ நீலம் அல்லது ஊதா நிற கூறுகள் சேர்த்து, கூந்தலின் மஞ்சள் - பழுப்பு நிற கூறுகளை நீக்கி, முடியின் நிறத்தை சரியானதாக மாற்றுவதாக இருக்கும்; முடியின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

முடியின் வேர்கால்களுக்கான ஷாம்பூ:
தலையின் மேற்பாகம், முடியின் வேறுபக்கம் சென்சிட்டிவாக இருந்தால், அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்றவை ஏற்படும். இந்த விதமான முடி கொண்ட நபர்கள் பந்தேனால் அதாவது ப்ரோ வைட்டமின் B5, பைசாபோலொள், கற்றாழை போன்ற மூலக்கூறுகள் அடங்கிய ஷாம்பூவை பயன்படுத்துவது நல்லது. இது தலையின் சென்சிட்டிவிட்டியை குறைத்து முடி வளர்ச்சியை தூண்ட உதவும்.

முடிக்கு முழு சுத்தம் தரும் ஷாம்பூ:
அதிக முறை தாலிக்கு குளிப்பதோ, தினந்தோறும் ஷாம்பூ பயன்படுத்துவதோ முடிக்கு தூய்மையான சுத்தத்தை தராது. முடி தூய்மையான சுத்தம் அடைந்து விட்டதை தலையில் உள்ள பொடுகு, பேன், உலர்ந்த தன்மை என இவை போன்ற அனைத்தும் நீங்கும் போதே உணரலாம். இதற்கு உங்கள் முடியின் தன்மையை மேற்கண்ட பத்திகளில் கூறியதன் வாயிலாக அறிந்து, அதற்கான சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால், கூந்தல் முழுமையான சுத்தத்தை பெறும்.



Click it and Unblock the Notifications











