Latest Updates
-
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்!
மீசை மற்றும் தாடி வளராத ஆண்களுக்கு உதவும் எளிய வகை காய்-கனிகள்...!
ஆண்களின் வீரத்தை பறைசாற்றுவதாக கருதப்படும் மீசை மிகவும் முக்கியமானதாக பல ஆண்களால் கருதப்படுகிறது. இது பல நூற்றாண்டாக ஆண்களின் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே இவை விரைவில் வளர கூடும். பல ஆண்களுக்கு இவை வளராமலே இருந்து விடும். அத்தகைய வகையில் மீசை மற்றும் தாடி வளரவில்லை என்றால் அது அவபெயரை அவர்களுக்கு ஏற்படுத்த கூடியதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

இவை வளராததற்கு பல்வேறு காரணிகளை மருத்துவ ஆய்வில் கூறுகின்றனர். இந்த பதிவில் மீசை மற்றும் தாடியை கிடுகிடுவென வளர வழி செய்யும் எளிய வகை காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆண்கள் பருவமடைதலின் அறிகுறி..!
பெண்கள் எவ்வாறு பருவம் அடைகிறார்களோ அதே போன்று ஆண்களும் பருவம் அடைகிறார்கள். ஆண்கள் பருவம் அடைந்தால் ஒரு சில அறிகுறிகள் தென்படும். அவற்றில் முக்கியமான ஒன்றுதான், உடலில் சில பாகங்களில் முடி வளர்தல். குறிப்பாக மீசை மற்றும் தாடி முடிகள் வளர்தல். இவை டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன்களின் செயல்பட்டால்தான் வளர்கிறது.

வாழைப்பழம்
எண்ணற்ற பொட்டாசியம் கொண்ட வாழைப்பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் மீசையின் முடிகள் வளருமாம். மீசை மற்றும் தாடியில் முடி வளர சிரமப்படும் ஆண்களுக்கு இவை அருமையான தீர்வு. இவற்றுடன் முடி உதிர்ந்து வழுக்கை ஆவதையும் இவை தடுக்கிறது.

ஆரஞ்ச்
முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும் இந்த கனிதான் உங்கள் மீசை பிரச்சினைக்கும் முற்றுபுள்ளி வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி மீசையின் வளர்ச்சியை ஊக்குவித்து, கருகருவென வளர செய்யும். மேலும், இவற்றில் beta-carotene மற்றும் flavonoids இருப்பதால் தாடியை அழகாக வளர செய்யும்.

நெல்லி
முடி பிரச்சினை அனைத்திற்கும் அருமையான தீர்வு தரும் அற்புத கனி இந்த நெல்லி. இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை செம்மைப்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் மிக குறுகிய காலத்திலே மீசை மற்றும் தாடியின் முடிகள் வளர்ந்து அழகு பெற செய்யும்.

பிளம்ஸ்
Bioflavonoid என்ற முக்கிய ஊட்டசத்தை கொண்டுள்ள இந்த பிளம்ஸ்கள் உங்களின் தாடிக்கு உற்ற நண்பனாக திகழ்கிறது. இனிமையான இந்த பிளம்ஸை சாப்பிட்டு வந்தால் தாடி மற்றும் மீசை வளராமல் அவதிப்படும் ஆண்களுக்கு கூடிய விரைவிலேயே இவை வளர தொடங்கும்.

ஆப்பிள்
தாடியின் வளர்ச்சிக்கு இந்த ஆப்பிள் நல்ல முறையில் உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடும் ஆண்கள் உடல் ஆரோக்கியதுடன் மீசை மற்றும் தாடியின் ஆரோக்கியத்திற்கும் வழி செய்கிறது. இவற்றில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் கொண்டிருப்பதால் பல வித நன்மைகளை இது மீசைக்கு தருகிறது.

ஸ்ட்ராவ்பெரிஸ்
பார்ப்பதற்கே செக்கச்சிவந்த நிறத்தில் உள்ள இந்த பழத்தின் அருமையை முதலில் அறிந்து உண்ணுங்கள். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி அதிகம் இதில் இருப்பதால் தாடி முடிகளை அடர்த்தியாக வளர செய்யும். மேலும், கருப்பான மீசையை இது வளர செய்யும்.

கேரட்
கண்ணுக்கு எந்த அளவில் கேரட் நலம் தருகின்றதோ அதே அளவிற்கு இவை மீசை மற்றும் முடியின் நலனுக்கும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் எ, பீட்டா கரோடின் போன்றவை தாடி முடியின் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவையானது. மேலும், பயோட்டின் இதில் இருப்பதால் முடியின் வளர்ச்சிக்கும் பெரிதும் இது உதவும்.

பூசணிக்காய்
மீசை வளர்ச்சி குறைவாக உள்ள ஆண்கள் தங்களின் உணவில் இந்த பூசணிக்காயை சேர்த்து கொள்வது நலம் தரும். பல ஆண்கள் இவற்றை வெறுத்து தள்ளுகிறார்கள். வைட்டமின் சி, பி, எ, போன்றவை இதில் அதிகம் உள்ளது. மேலும் மீசையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் beta-carotene முக்கியமாக நிறைந்துள்ளது. எனவே பூசணியை தவிர்க்காமல் உண்ணுங்கள் நண்பர்களே.

வள்ளிக்கிழங்கு
எளிமையாக கிடைக்க கூடிய இந்த சர்க்கரை வள்ளிகிழங்கு மீசையின் ஆரோக்கியத்திற்கு நலனை தருகிறதாம். காப்பர், மக்னீஸ், பொட்டசியம், நார்ச்சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதாம் மீசை வளர்ச்சிக்கு வள்ளிக்கிழங்கு பெரிதும் பயன்படும்.

முளைக்கீரை
இப்போதெல்லாம் அதிக பேர் கீரையை விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். இவற்றில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மீசை மற்றும் தாடி நன்கு வளரும். இவற்றில் வைட்டமின் எ அதிகம் உள்ளதால், முகத்தின் திசுக்களை மென்மையாக்கி, தாடி முடிகள் உடைதல், உதிர்தல் போன்ற பிரச்சினைகளை தடுக்கும்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications