மணப்பெண்ணா நீங்கள்!! மணமேடையில் ஜொலிக்க 10 ஹேர் ஸ்டைல்கள் இதோ உங்களுக்காக !

Written By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் திருமணத்தை பற்றிய கனவுகள், திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பர். திருமணத்திற்காக வாங்கும் நகைகள், உடைகள், மேக்கப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் எல்லாவற்றையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து வாங்குவார்கள். இவற்றையெல்லாம் செய்து விட்டு உங்கள் ஹேர் ஸ்டைல் மீது மட்டும் அக்கறை இல்லாமல் இருந்தால் எல்லாம் வீணாய் போகும் அல்லவா? எனவே மணப்பெண்கள் தங்களது ஹேர் ஸ்டைல் பற்றிய திட்டத்தை வைத்துக் கொள்ளவது நல்லது.

10 different new Hairstyle Ideas For Indian Brides

இந்திய மணப்பெண்களுக்காக நிறைய ஹேர் ஸ்டைல் அலங்காரங்கள் உள்ளன. இவற்றை தேர்ந்தெடுக்கும் போது உங்களது உடைகள், முகமைப்பு, கலாச்சாரம் மற்றும் முடியின் நீளம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஹேர் ஸ்டைலிஸ்ட் தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த ஹேர் ஸ்டைல் அலங்காரங்கள் அழகாக அமையும்.

உங்களுக்கு தகுந்த ஹேர் ஸ்டைல்யை தேர்ந்தெடுக்க நேரம் மற்றும் மற்றவர்களின் கருத்தாய்வு தேவைப்படும். இங்கே நிறைய ஹேர் ஸ்டைல் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது இதில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஹேர் ஸ்டைல்யை விரும்பாமல் உங்களுக்கு தகுந்த பொருத்தமான ஹேர் ஸ்டைல்யை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் ஒத்திகை பார்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இந்த கருத்துகளை பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் திருமணத்தில் அழகாக காட்சியளிப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.பிக் ரவுண்டு பண்:

1.பிக் ரவுண்டு பண்:

இந்த வகை ஹேர் ஸ்டைல் இந்திய மணப்பெண்களிடம் பொதுவாக காணப்படும் ஹேர் ஸ்டைல் ஆகும். ஒரு பெரிய ரவுண்டு வடிவில் பண் ரிங்கை பயன்படுத்தி இதை உருவாக்குவர்.

மேலும் இதன் நடுவில் அழகான கலர்புல்லான பூக்கள் மற்றும் ஸ்டோன் வொர்க் செய்து அலங்கரிப்பர். இந்த ஹேர் ஸ்டைலில் பண் ரிங்கை பயன்படுத்துவதால் உங்களுக்கு நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும். எனவே இந்த ஹேர் ஸ்டைல் நீண்ட நேர நிகழ்ச்சிக்கு ஏற்றது. இதிலும் சில பெண்கள் முக்காடு போட்டுக் கொள்வது இன்னும் அழகாக இருக்கும்.

2.டெக்கரேட்டிவ் பிளைட் :

2.டெக்கரேட்டிவ் பிளைட் :

இந்த வகை ஹேர் ஸ்டைல் தென்னிந்திய மணப் பெண்களால் விரும்பப்படும் ஹேர் ஸ்டைல் ஆகும். திருமணத்திற்கான உடை புடவை என்றால் இந்த ஹேர் ஸ்டைல் மிகவும் பொருத்தமாக அமையும்.

மணப்பெண்களுக்கு நீளம் குறைந்த கூந்தல் இருந்தால் இந்த பிளைட்டை பயன்படுத்தி ஹேர் ஸ்டைல் பண்ணுவர். மேலும் இந்த பிளைட்டை புடவையின் நிறத்திற்கு பொருத்தமாக கலர்புல்லான பூக்கள் மற்றும் ஸ்டோன் வொர்க் செய்து அலங்கரிப்பர். இது பார்ப்பதற்கு கலாச்சாரம் சார்ந்த அழகு கிடைக்கும்.

3.சைடு பண் ஹேர் ஸ்டைல் :

3.சைடு பண் ஹேர் ஸ்டைல் :

இதுவும் பண் ரிங்கை பயன்படுத்தி செய்யும் ஹேர் ஸ்டைல் ஆகும். ஆனால் இதை பக்கவாட்டில் சற்று தாழ்த்தி காதை மறைக்கும் படி பண்ணுவர். இந்த ஹேர் ஸ்டைல் முன்புறத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் அழகாக காட்சியளிக்கும். இதை உங்கள் விருப்பத்திற்கிணங்க வலது அல்லது இடது சைடில் போட்டுக் கொள்ளலாம்.

4. ரெட்ரோ ஹேர் பப்பி:

4. ரெட்ரோ ஹேர் பப்பி:

இது 80 காலத்தில் உள்ள ஹேர் ஸ்டைல் ஆகும். எல்லா முடியையும் ஒன்றாக இழுத்து உச்சந்தலையில் பண் ரிங்கை பயன்படுத்தி செய்வர் அல்லது பின்னால் உள்ள முடியை அப்படியே விரிந்த கூந்தலா விட்டுவிடுவர். இந்த ஹேர் ஸ்டைல் நீளம் குறைந்த கூந்தலுக்கு பொருந்தும். மேல் முடியை பப்பியாக்கி இறுக்கமாக கட்டி விட்டால் நல்லது. அப்போது தான் சடங்குகளின் போது கலையாமல் இருக்கும்.

5.டென்டிருள் ஹேர் டூ :

5.டென்டிருள் ஹேர் டூ :

இது ஒரு கஷ்டமான ஹேர் ஸ்டைல் ஆகும். இதற்கு நல்ல அனுபவம் வாய்ந்த ஹேர் ஸ்டைல்லிஸ்ட் தேவை. இந்த ஹேர் ஸ்டைல்க்கு முக்காடு போட்டு மறைக்க கூடாது. இதற்கு அலங்காரமாக நெத்திச் சுட்டி அல்லது பக்கவாட்டில் நெத்திச் சுட்டி இடுவது ரொம்ப அழகாக இருக்கும்.

6.லோயர் பண் ஹேர் ஸ்டைல் :

6.லோயர் பண் ஹேர் ஸ்டைல் :

இதில் எல்லா முடியையும் இழுத்து கீழே இறக்கி கொண்டை போட்டு அதன் நடுவில் கிளிப் போட்டு மாட்ட வேண்டும். மணப்பெண்களின் முகத்திற்கு ஏற்றவாறு கீழ் பகுதியில் அல்லது பக்கவாட்டு பகுதியில் போட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த ஹேர் ஸ்டைல் உயரமான பெண்களுக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும். உங்கள் கணவராலும் கண்டிப்பாக விரும்பப்படும்.

7.சைடு பிஷ் டைல் பிளைட் :

7.சைடு பிஷ் டைல் பிளைட் :

இது ஒரு சாதாரணமான ஹேர் ஸ்டைல் தான் ஆனால் இதையே சைடாக போட்டால் மிகவும் அழகாக இருக்கும். இதன் ஒவ்வொரு பின்னலிலும் முத்துப் பாசிகள், அழகான பூக்கள் மற்றும் ஸ்டோன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கும். இந்த ஹேர் ஸ்டைல் லெஹங்கா போன்ற திருமண உடைகளுக்கு பொருந்தும். மேலும் இது திருமண நிகழ்ச்சிக்கு மட்டுமில்லாமல் நிச்சயதார்த்தம் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சிகளுக்கு சிறந்தது.

8. அழகான போனி டைல் :

8. அழகான போனி டைல் :

இந்த வகை ஹேர் ஸ்டைல் ஆரோக்கியமான அழகான கூந்தல் உடைய பெண்களுக்கு அழகாக இருக்கும். இதை பண்ணுவதற்கு முதலில் தலைக்கு குளித்து நன்றாக ஈரப்பதம் இல்லாமல் காய வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சலூன் சென்று போனி டைல் போட்டு அலங்காரம் பண்ணினால் பார்ப்பதற்கு அழகான வடிவத்துடன் அடர்த்தியாகவும் இருக்கும். இந்த வகை ஸ்டைலுக்கு ஹேர் ஸ்பிரே மிகவும் அவசியம். அப்பொழுது தான் கலையாமல் அப்படியே இருக்கும்.

9.பாதி விரிந்த ஹேர் ஸ்டைல் :

9.பாதி விரிந்த ஹேர் ஸ்டைல் :

இந்தக் காலத்து பெண்கள் இந்த வகை ஹேர் ஸ்டைல்யை மிகவும் விரும்புகின்றனர். பாதி விரிந்த நிலையில் கூந்தலை விட்டு விட வேண்டும். பின்னால் கூந்தல் சிக்கல் இல்லாமல் நீளமாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இன்னும் அழகேற்ற இதற்கு கலர்புல்லான பூக்கள் மற்றும் ஸ்டோன் வொர்க் செய்தால் நன்றாக இருக்கும்.

10. லோயர் சுருள் ஹேர் ஸ்டைல் :

10. லோயர் சுருள் ஹேர் ஸ்டைல் :

இந்த வகை ஹேர் ஸ்டைலில் கூந்தலை விரித்து விட்டு கீழ் பகுதியில் மட்டும் சுருளை உண்டாக்கி இருப்பர். இதற்கு முக்காடு போட்டு இருந்தால் அதன் சுருள் முடிக்கும் அதற்கும் அழகாக இருக்கும். நீண்ட நேர நிகழ்ச்சிகளுக்கு சுருள் முடி கலையாமல் இருக்க ஆம்புள் பாப்பி பின்ஸ் பயன்படுத்தினால் நல்லது.

11.விரிந்த கூந்தல் ஹேர் ஸ்டைல் :

11.விரிந்த கூந்தல் ஹேர் ஸ்டைல் :

இந்த வகை ஹேர் ஸ்டைல் குறைந்த நேர நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது. ஆரோக்கியமான பொலிவான கூந்தல் மட்டுமே இந்த வகை ஹேர் ஸ்டைல்க்கு ஏற்றது. ஏனெனில் முழுவதும் விரிந்த வண்ணம் இருப்பதால் சிக்கல்கள் இல்லாமல் மிருதுவான அதிக சுருளில்லாத கூந்தலாக இருந்தால் நல்லது.

இதை அலங்கரிக்க பூக்கள் மற்றும் ஸ்டோன் வொர்க், நெத்திச் சுட்டி போன்றவற்றை கொண்டு அலங்கரித்தால் ரொம்ப அழகாக இருக்கும்.

என்ன மணப்பெண்களே இன்னும் ஏன் வைட் பண்றீங்க உங்களுக்கு தகுந்த ஹேர் ஸ்டைல்யை தேர்ந்தெடுத்து மணமேடையில் எல்லாரும் வியக்கும் வண்ணம் அழகாய் மாறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 different new Hairstyle Ideas For Indian Brides

10 different new Hairstyle Ideas For Indian Brides
Story first published: Monday, June 19, 2017, 8:00 [IST]