Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
முடி வெடிப்பைத் தடுக்கும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள்!
சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த முடியின் வெடிப்புக்களை ஒருசில ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம். இங்கு முடி வெடிப்பைத் தடுக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாழைப்பழ ஹேர் பேக்
நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் முனையில் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

முட்டை மற்றும் பால்
1 முட்டையை நன்கு அடித்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதனால், முடி வெடிப்புக்கள் மட்டுமின்றி, முடியின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

பப்பாளி ஹேர் பேக்
பப்பாளியை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து அலச, முடி வெடிப்புக்கள் மட்டுமல்லாமல், முடியின் மென்மை மற்றும் வலிமை அதிகரிக்கும்.

பீர் ஹேர் பேக்
பீர் உடலுக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் நல்லது. குறிப்பாக முடியின் வெடிப்புக்களைத் தடுக்க பீர் மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு பீரை தலைமுடியில் நன்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முடியில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

சூடான எண்ணெய் சிகிச்சை
ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அவற்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைமுடியை நீரில் அலசி, பின் ஈரமான தலையில் இந்த எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாகவும், வெடிப்புக்களின்றியும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
