Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
கூந்தல் உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் மசாலாப் பொருட்கள்!!!
இன்றைய காலத்தில் பெருகிவரும் நோய்களால் நாம் நமது உடல்நல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனால், நாம் உட்கொள்ளும் உணவுகளில் மட்டுமல்லாது நமது உடல் உறுப்புகளில் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும். நமது சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்தி அதனை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மசாலாப் பொருட்கள் நமது உணவின் சுவையையும் மணத்தையும் மேம்படுத்த உதவுக்கின்றன. ஒவ்வொரு மசாலாப் பொருட்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த மணம், சுவை மற்றும் பலன்களை பெற்றுள்ளன. சில மசாலாப் பொருட்கள் மிதமானவை ஒரு சில வன்மையானவை. இந்திய சமையலில் மசாலாப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்திய உணவு வகைகளின் தனித்தன்மை அதில் உபயோகித்த மசாலாப் பொருட்களின் கூட்டமைப்பில்தான் நிறைந்துள்ளது. மசாலாப் பொருட்கள் அதிகமாக விளைவதாலும் அதனை அதிகமாக உபயோகிப்பதாலும் இந்தியாவை "லாண்ட் ஆப் ஸ்பைசெஸ்" என்று அழைக்கின்றனர்.
மசாலாப் பொருட்கள் சமைப்பதற்கு மட்டுமே பயன்படுவது என்பது அல்லாமல் ஆரோக்கிய நலன்களுக்கும் பயன்படுத்தப்படுக்கின்றது. சில வகை மசாலாப் பொருட்கள் அழகு பராமரிப்பு பலன்களை பெற்றுள்ளது. உதாரணமாக, மஞ்சள் நமது சருமத்தை தூய்மை ஆக்குவதோடு நமது சரும நிறத்தை மேம்படுத்த உதவுகின்றது. அதே போல், சிலவகை மசாலாப் பொருட்கள் நமது தலைமுடியை பராமரிக்க உதவுகின்றது. இவை நமது தலைமுடியின் வேர்களை வலுவடையச் செய்து அதன் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது. சிலவகை பொருட்கள் நமது தலைமுடியுதிர்விற்கு தீர்வு காணச் செய்து மற்ற பிரச்சனைகளான வறண்ட தலைமுடி, மந்தமான தலைமுடி போன்றவற்றிற்கும் தீர்வு காணச் செய்கின்றது.
நமது தலைமுடி உதிர்வை தவிர்த்து தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் அதிக பலன்கள் நிறைந்த மசாலாப் பொருட்கள் சிலவற்றைப் பற்றி படிக்கலாம்.

கறிவேப்பிலை
நமது இந்திய பெண்களின் தலைமுடி அழகிற்கு பெரிதும் காரணமாக இருப்பது இந்த கறிவேப்பிலைதான். இந்த மசாலாப் பொருள் நமது உணவிற்கு சுவை சேர்ப்பதோடு மட்டுமல்லாது அடர்த்தியான நீண்ட தலைமுடியை பெறவும் உதவுகின்றது. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை நிரப்பி அதில் சில கறிவேப்பிலை இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். கரும் கசடு ஏற்படும் வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கசடை நமது தலைமுடியில் தடவ வேண்டும். இரவு முழுவதும் அல்லது 2-3 மணிநேரங்கள் தடவி பின்னர் குளிக்கவும். இதனை தொடர்ந்து செய்துவந்த சில நாட்களிலேயே உங்கள் தலைமுடி வளர்ந்திருப்பதை உணருவீர்கள்.

கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் நமது உணவிற்கு சுவை அளிப்பதோடு நமது சருமம், தலைமுடி மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்கும். இதில் நிறைந்திருக்கும் இயற்கையான தன்மைகள் நமது தலைமுடி பாளிகல்சை வலுவடையச் செய்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனை தலைமுடி கொட்டுவதற்கும் தலைமுடி உதிர்விற்கு தீர்வாகவும் உபயோகிப்பார்கள். கருஞ்சீரகம் தலைமுடியின் வளர்ச்சிக்கு நன்மையை அளிக்கும்.

மஞ்சள்
சக்தி வாய்ந்த மசாலாப் பொருளான மஞ்சள் பலவகை பலன்களை பெற்றது. இதனை காயங்களுக்கு ஆண்டிசெப்டிகாகவும், நமது சருமத்திற்கு கண்டீஷ்னராகவும், நமது உடலை சுத்தம் செய்வதற்கும், வளமான ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த பலவகை பலன்களை கொண்ட மஞ்சளை தலைமுடி பராமரிப்பிற்கும் உபயோகித்து வருகின்றனர். இது நமது தலைமுடிக்கு ஊட்டமளித்து தலைமுடி வளருவதை ஊக்குவிக்கின்றது. இது பொடுகு பிரச்சனைகளை குறைத்து அதனால் ஏற்படும் தலைமுடியுதிர்வை குறைக்கின்றது. இதனை நேரடியாகவோ அல்லது எண்ணையுடன் குழைத்தோ தடவலாம். 20 - 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் அலசவும். இதனை தொடர்ந்து உபயோகித்து சிறந்த பலனை அடையலாம்.

மிளகு
சிவப்பு மற்றும் கரும் மிளகு இவை இரண்டும் நமது உணவில் காரத்தை அளித்தாலும் நமது தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகின்றது. இதில் உள்ள இயற்கையான நச்சுத்தன்மை நமது தலைமுடி பாலிகல்சை வலுவடையச்செய்து ஆரோக்கியமான புதிய தலைமுடி வளர மேம்படுத்துகின்றது. இது நமது தலையில் உள்ள இரத்த போக்குவரத்தை மேம்படுத்தி நமது தலை முடி வளர காரணமாக இருக்கின்றது. எனவே, இந்த மிளகு நமது தலைமுடி வளர்ச்சி காரணமாக இருக்கும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும்.

ரோஸ்மேரி
இந்த மசாலா பொருள் சூப் மற்றும் சவோரீஸ் வகை உணவுகளுக்கு மெல்லிய மணத்தை அளிக்கும். இதனை தலைமுடிக்கு உபயோகித்தால் மேலும் சிறந்த பலன்களை அளிக்கக்கூடும். இந்த ரோஸ்மேரி நமது தலைமுடி வளர்ச்சிக்கும் ஊட்டமளிப்பதற்கும் சிறந்த ஒன்றாகும். இது தலைமுடியின் பாலிகல்சை ஊக்குவித்து தலைமுடியுதிர்வை தடுக்கும். இதனை பொடுகு பிரச்சனைக்கும் வறண்ட கூந்தலுக்கும் தீர்வாக உபயோகிப்பார்கள்.

ஆரோக்கியமான மற்றும் நீளமான கூந்தல்
மேற்கூறிய அனைத்து மசாலாப் பொருட்களையும் எண்ணெயுடன் சேர்த்தோ, தலைமுடி மாஸ்க்காகவோ, தலைமுடி பேக்காகவோ உபயோகிக்கலாம். இவ்வாறு இவற்றை தொடர்ந்து உபயோகப்படுத்தினால், அவை தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவி புரியும். ஆகவே சருமத்திற்கும், தலைமுடிக்கும் இரசாயன பொருட்களாலான மருந்துகளை உபயோகிக்காமல், இந்த இயற்கையான சிகிச்சைகளை உபயோகித்தால், நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications











