Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பொடுகை நீக்கும் சிறந்த 9 ஹேர் மாஸ்க்குகள்!!!
பொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இதனைப் போக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அதற்கான பலன் தான் கிடைக்காமல் இருக்கும். மேலும் சிலர் இதற்காக பல மருத்துவரை சந்தித்து, அதற்கு தீர்வை கண்டுபிடிக்க முயற்சியை மேற்கொண்டாலும், பணம் தான் செலவாகியிருக்குமே தவிர, பொடுகு அப்படியே தான் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், அவ்வாறு பணம் செலவழித்து பொடுகை நீக்கும் பொருளை வாங்கிப் பயன்படுத்திய பின்னர், பொடுகு இன்னும் அதிகமாகியிருக்கும். ஆகவே எப்போதும் செயற்கை முறையை பின்பற்றாமல், இயற்கை முறையைப் பின்பற்ற வேண்டும். அதிலும் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி பொடுகை நீக்க வேண்டும். இப்போது பொடுகை இயற்கை முறையில் போக்குவதற்கு எந்த ஹேர் மாஸ்க் சிறந்தது என்று ஒருசில பராமரிப்பு பொருட்களையும், அதற்கான முறையையும் கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து பார்த்து முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பொடுகுத் தொல்லையிலிருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, முடி நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை ஒரு நல்ல பொடுகை நீக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றை விட்டு, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மைல்டு ஷாம்பு கொண்டு முடியை நீரில் அலச வேண்டும்.

கொத்தமல்லி
கொத்தமல்லியை அரைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளித்தால், பொடுகு போய்விடும். அதிலும், இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் படுக்கும் முன், ஸ்கால்ப்பில் ஆலிவ் ஆயிலை தடவி, ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தயிர்
தயிரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, கலந்து ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலசிவிட்டால், தயிர் ஸ்கால்ப்பை சுத்தம் செய்து, எலுமிச்சை சாறு பொடுகு மற்றும் இறந்த செல்களை வெளியேற்றிவிடும். மேலும் இந்த முறை தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

வேப்பிலை
வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மையாலேயே, கிருமிகள் எங்கிருந்தாலும் அகன்றுவிடும். அந்த வகையில் பொடுகுத் தொல்லை இருந்தால், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையை அரைத்து, அதில் மிளகு தூள், வெந்தயப் பொடி மற்றும் சிறிது கற்பூரம் சேர்த்து கலந்து, சிறு துளி எலுமிச்சை சாறு சேர்த்து, எண்ணெயுடன் கூடிய தலை மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

களிமண் பொடி
2 டேபிள் ஸ்பூன் களிமண் பொடியை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, ஒரு பிளாஸ்டிக் பை அல்லது துணியைக் கொண்டு சுற்றி, 1 மணிநேரம் ஊற வைத்து, இறுதியில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

செம்பருத்தி
செம்பருத்தியின் இலை மற்றும் பூ, முடிக்கு மிகவும் நல்லது. அதிலும் இது முடியின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பொடுகை போக்கும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. அதற்கு நீரில் செம்பருத்தியின் இலை அல்லது பூவை போட்டு கொதிக்க விட்டு, நீரை வடிகட்டி விட்டு, இலை அல்லது பூவை நன்கு அரைத்து, அதில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருப்பாக வளரும்.

வினிகர்
3 டேபிள் ஸ்பூன் வினிகரில், 3 டேபிள் ஸ்பூன் களிமண் பொடியைப் போட்டு கலந்து, தலையில் ஷாம்புவிற்கு பதிலாக தேய்த்து குளித்தால், அழகான முடியுடன், பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

தைம்
இந்த முறை ஹேர் மாஸ்க்காக இல்லாவிட்டாலும், பொடுகை நீக்கும் ஒரு முறை. அதற்கு 7 டேபிள் ஸ்பூன் வறட்சியான தைம்மை, 2 கப் நீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, அந்த நீரை தலைக்கு குளித்தப் பின் தலையில் தடவி மசாஜ் செய்துவிட வேண்டும். குறிப்பாக இந்த முறையில் மசாஜ் செய்த பின்னர், முடியை நீரில் அலசக் கூடாது.



Click it and Unblock the Notifications











