Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
முடி வெடிப்புக்களை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!
பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இந்த முடி வெடிப்புக்களானது இருந்தால், கூந்தலின் வளர்ச்சி தடைபடும். பொதுவாக இந்த பிரச்சனை வருவதற்கு காரணம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அதிகப்படியான வெப்பம் தான். அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துதல், ஹேர் ட்ரையர், கூந்தலை வெப்பமாக்கும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எவ்வளவு தான் இருந்தாலும், இவற்றையெல்லாம் தவிர்த்தாலும், முடி வெடிப்பு பிரச்சனைக்கு மட்டும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. ஆனால் நம்பிக்கையுடன் ஒருசில செயல்களை மேற்கொண்டால், நாளடைவில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் அதற்கு சற்று நாட்கள் ஆகும். இருப்பினும், பொறுமையாக இருந்து நம்பிக்கையுடன் பின்பற்ற வேண்டும்.
ஆகவே இங்கு அந்த முடி வெடிப்பு பிரச்சனையைப் போக்க உதவும் சில இயற்கை வைத்தியங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றினால், நிச்சயம் முடி வெடிப்புக்கு நல்ல தீர்வை காணலாம்.

பப்பாளி பேக்
நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, கூந்தல் முழுவதும் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போடாமல் அலச வேண்டும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றினால், முடி வெடிப்பு நீங்கி, கூந்தல் நன்கு மென்மையாக இருக்கும்.

பால் மற்றும் க்ரீம்
அரை கப் பாலில், 1 டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரிசமமாக எடுத்துக் கொண்டு, கூந்தலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, துணியால் தலையைக் சுற்றி, 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசினால், முடி வெடிப்பிலிருந்து விடுபடலாம்.

பீர்
பீர் ஒரு சிறந்த அழகுப் பொருளும் கூட. அதிலும் பீரைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு நீரில் அலசிட வேண்டும். இல்லாவிட்டால், பீர் நாற்றமானது அப்படியே இருக்கும்.

முட்டை
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசினாலும், முடி வெடிப்பில் இருந்து விடுபடலாம்.

உளுத்தம் பருப்பு
1/2 கப் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை 1/2 கப் தயிர் ஊற்றி கலந்து, கூந்தலில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு, கூந்தலை அலச வேண்டும்.

தேன்
முடி வெடிப்புக்கு ஒரு நல்ல நிவாரணி தான் தேன். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 கப் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, நீரில் நன்கு அலச வேண்டும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டுப் போன்று இருப்பதோடு, முடி வெடிப்பும் போய்விடும்.

அவகேடோ
அவகேடோவில் முடிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அவகேடோவை நன்கு மசித்து, ஈரமான கூந்தலில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

மயோனைஸ்
ஒருவேளை அவகேடோ கிடைக்காவிட்டால், மயோனைஸை கூந்தல் முழுவதும் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
