Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆண்களே! பொடுகு தொல்லை தாங்க முடியலையா? இத ட்ரை பண்ணுங்க...
ஆண்களிடம் பொடுகு இருந்தால் பெண்கள் அவர்களை கவனிக்க மாட்டார்கள். பெண்களோடு வெளியே செல்லும் போது தோள்பட்டையில் செதில்கள் இருந்தால் அது அவர்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கும். ஆண்களிடம் காணப்படும் பொடுகுகள் அவர்களுடைய மண்டைத்தோல் வறண்டு விடுவதனாலோ அல்லது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளாலோ தான் ஏற்படுகிறது. பொடுகு பிரச்னையை சரியான முறையில் கவனிக்காமலோ அல்லது சிகிச்சை செய்யாமலோ இருந்தால் அது பல்லாண்டுகள் தொடர்ந்து வந்து தொல்லை தரும். சில சமயம் ஆண்களிடம் காணப்படும் பொடுகு பிரச்சனை ஷாம்புவை மாற்றுவதினாலும், நீரில் தொற்று இருப்பதாலும், துணையின் மூலம் தலையணையில் வழியாக தொற்றி பரவுவதாலும் ஆரம்பமாகும்.
வீட்டிலிருந்த படியே பல வழிகளைக் கொண்டு பொடுகு தொல்லையை சரி செய்யவும், குறைக்கவும் அல்லது பொடுகை வராமலும் தடுக்க முடியும். இவற்றில் பல சிட்ரஸ் அமிலத்தை சேர்த்து செய்யும் முறைகளாகும். இவை மிக சிறப்பான நிவாரணியாக விளங்குகிறது. எலுமிச்சை சாறை பிற இயற்கை பொருட்களில் சேர்த்து குளிப்பதற்கு முன்போ அல்லது குளித்த பின்போ அதன் செய்முறைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி நிவாரணம் அடையலாம்
எலுமிச்சையுடன் தேங்காய் எண்ணைய், ஹாசில் நட் எண்ணெய், வினிகர், ஆலிவ் எண்ணெய், புலித்த தயிர், பெப்பர் மிண்ட் எண்ணெய், தேயிலை சாறு ஆகியவை சேர்த்தும் பயன்படுத்தி நிவாரணம் அடையலாம். இவை அனைத்தும் ஆண்களிடையெ பொடுகை போக்கவல்லவை. இவை தலையை தூய்மைப்படுத்தி ஈரப்பதமூட்டி தலைமுடியை பக்குவப்படுத்தி வைக்கின்றன. மண்டைத் தோலையும் முடியையும் சுத்தமாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் மற்றும் பொடுகை பெருமளவில் கட்டுபடுத்தும். குறிப்பாக எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் அடர்ந்த கடுமையான பொடுகையும் நீக்கி விடும்.
கீழ்வருபவை ஆண்களின் தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கான எலுமிச்சை சேர்ந்த வீட்டு நிவாரணிகளாகும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை எதிர்மறையான சூட்டில் வைத்து எடுத்து அதில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறை கலந்து மண்டையில் தடவி மசாஜ் செய்யவும். இதை 15 நிமிடங்கள் செய்து விட்டு பின்னர் ஷாம்புவால் கழுவவும். இவ்வாறு ஒரு வாரத்திற்கு 2 முதல் 4 முறை செய்தால் பொடுகு மெதுவாகவும் திறம்படவும் நீங்கிவிடும்.

ஹாசில் நட் எண்ணெய்
எதிர்மறையான சூட்டில் 1 தேக்கரண்டி ஹாசில் நட் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து இந்த கலவையை கொண்டு வட்ட வடிவில் தலையை இதமாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழிந்த பின்னர் கழுவவும். எலுமிச்சை துண்டுகளை நேரடியாக தலையில் மசாஜ் செய்தால் பொடுகுகள் நீங்கிவிடும்.

வினிகர்
4 தேக்கரண்டி வினிகர் சாறு மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு பொடுகை நீக்குவதற்கு சிறந்த மருந்தாகும். இதை சூடு படுத்த தேவை இல்லை. பஞ்சு உருண்டை கொண்டு மண்டையின் தோல் பகுதியில் இதை தடவவும். இந்த செயலை தொடர்ந்து செய்தால் பொடுகு நீங்கும்.

புளிப்பான தயிரும், தேனும்
புளித்த தயிர், 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து திடமான பதத்திற்கு கொண்டு வந்து மண்டையில் தடவுவது பொடுகை நீக்கும். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் விட்டு கழுவவும். இவ்வாறு ஒரு வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்தால் பொடுகு அறவே நீங்கி விடும்.

தேநீர்
பொடுகை நீக்குவதற்கான சிறந்த வழி தேநீர் தான். 2 தேக்கரண்டி தேநீர் பொடியை அரை கப் தண்ணீருடன் கலந்து கொதிக்க விட்டு பாத்திரத்தை மூடி திடமான பக்குவத்திற்கு கொண்டு வரவும். பின்னர் அதை வடிகட்டி தேநீரை ஊற்றி கெட்டியான கலவையை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறை விட்டு அந்த கலவையை இதமான பதத்துடன் பஞ்சு உதவியுடன் தலையில் தடவவும். 15 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவிவிடவும்.

சூடான எண்ணெய் மசாஜ்
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறை ஆகியவற்றை 1:2:1 தேக்கரண்டி என்ற விகிதத்தில் கலக்கவும். வட்ட வடிவத்தில் இதமான முறையில் இந்த கலவையை தலையில் மசாஜ் செய்யவும். இதன் பிறகு இதமான மற்றும் ஈரமான துணியை கொண்டு தலையை கட்டி 20 நிமிடங்கள் ஊற வைத்தால் அது மிகுந்த பலனை கொடுக்கும்.

மருதாணி மருத்துவம்
4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 4 தேக்கரண்டி காப்பி, 2 முட்டை, ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் தேயிலை சாறு ஆகியவற்றை தேவையான அளவு மருதாணி பொடியுடன் சேர்த்து கலந்து ஒரு கெட்டியான பசையாக்க வேண்டும். இதை தலைமுடியில் தடவி விட்டு ஒரு மணிநேரம் கழித்து கழுவிட வேண்டும்.



Click it and Unblock the Notifications
