Latest Updates
-
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்! -
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கருணைக்கிழங்கை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் மாதிரி டேஸ்ட்டா இருக்கும்..
தலைக்கு 'பெயிண்ட்' அடிக்கப் போறீங்களா?...பார்த்துப் பண்ணுங்க!

நிரந்தர வர்ணங்கள்
ஹேர் கலரிங்" செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்ளுவதா அல்லது தற்காலிக மாக செய்து கொள்ளுவதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். நரை முடியை மறைப்பதற்காக கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தமான ஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுக்கலாம். ஒட்டுமொத்த கூந்தலையுமே கலரிங் செய்துகொள்வதா அல்லது ஹை லைட் மட்டும் செய்து கொள்வதா என்பதையும் தீர்மானிக்கவேண்டும்.
நிரந்தர கலரிங் செய்வதற்காக ஜெல், மற்றும் பிற பொருட்களும், செமி பெர்மனெட் கலரிங் செய்வதற்காக மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர்.
சிவப்பு நிறம் வேண்டாம்
தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன. ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது.
ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என விரும்பு கிறவர்கள், காப்பர் அல்லது சிவப்புநிறம் செய்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனென்றால், இவை விரைவில், வெளிறிவிடும் தன்மை கொண்டது. பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, அழகியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குட்டையான கூந்தல் அழகு
கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு ஹேர் கலரிங் செய்தால் மிக அழகாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கல ரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். ஆனால், இன்றைய நவீன இளைஞர்கள் பொதுவாக, ஹை லைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக் கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர்.
கூந்தல் வல்லுநர்கள்
ஹேர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். கலரிங் செய்த பின், அதற்கென உள்ள ஷாம்பு மற்றும் கண்டிஷனர் களையே பயன்படுத்த வேண்டும். ஹேர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் பொருட்கள் தரமானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது. ஏனெனில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
தரமற்றவைகளால் ஆபத்து
பென்சின் கலக்கப்பெற்ற அழகு சாதன பொருட்கள் பயன்படுத்த வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அவை எளிதில் கிடைக்கின்றன. இவை புற்றுநோய் மட்டுமல்லாது தோல்நோய்களையும் ஏற்படுத்துகின்றன.
எனவே அவசியமற்ற தருணங்களில் தலைமுடிக்கு வண்ணம் தடவுவதையும் தரமற்ற செயற்கை மருதாணி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் ஆலோசனை.



Click it and Unblock the Notifications
