Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும்?

கூந்தலை சீவ சில டிப்ஸ்...
1. தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவும் போது முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பைக் கொண்டு சீவினால், முடியானது கொத்தாக வேரோடு தான் வரும். ஆகவே தலைக்கு குளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 10 நிமிடம் முன்னர் எழுந்து தலைக்கு குளித்து, நன்கு முடியானது காய்ந்ததும், பின் சீப்பை போடுங்கள்.
2. கூந்தலை சீவும் போது தலைச் சருமத்திலும் நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்க படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.
3. கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது, கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் அந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.
4. அடர்த்தியான, நீளமான கூந்தல் இருந்தால், சீவும் போது இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியாக சீவலாம். இதனால் கூந்தலில் சிக்குகள் அதிகம் ஏற்படாது.
5. கூந்தலை சீவும் போது அடிக்கடி ஸ்டைலை மாற்றுங்கள். ஏனென்றால் கூந்தலை அடிக்கடி ஒரே ஸ்டைலில் சீவினால் கூந்தலானது உதிரும். உதாரணமாக, கூந்தலை எப்போதும் பின்புறமாகவே எடுத்து சீவினால், நெற்றியானது பெரிதாகிக் கொண்டே இருக்கும். ஆகவே அடிக்கடி மாற்றி சீவுங்கள்.
6. மேலும் கூந்தலை இறுக்கமாக கட்ட கூடாது. நிறைய பேர், இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். இது ஒரு கெட்ட பழக்கம். எப்படியெனில் கூந்தலை போனி டைல் போடும் போது, முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.
ஆகவே மேற்கூரியவாறெல்லாம் நினைவில் கொண்டு கூந்தலை சீவுங்கள், கூந்தல் உதிராமல், நீளமாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications
