Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம்
உங்களுக்கு சுருட்டை முடியா? அப்போ இந்த விஷயங்களை அதிகமா செய்யாதீங்க...
Hair Care Tips In Tamil: கூந்தலை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காக நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டியிருக்கும். அதுவே உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை நீங்கள் தனியாக கவனிக்க வேண்டும். சுருட்டை முடி என்பது மற்ற முடிகளை காட்டிலும் மாறுபட்டது. எனவே மற்றவகை முடிகளைப் போன்று இதை நீங்கள் பராமரிக்க முடியாது. சுருட்டை முடி இருப்பவர்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பாக இருக்கலாம் அல்லது நீங்கள் தினந்தோறும் குளிக்கும் முறையாக இருக்கலாம் அவற்றில் எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் சுருட்டை முடி இருப்பவர்கள் அவர்கள் செய்யும் தவறான விஷயத்தால் கூந்தல் உதிர்தல், முடி வளர்ச்சி தடைபடுதல் மற்றும் அதிகப்படியான சிக்கலுக்கு உள்ளாகின்றனர். எனவே சுருட்டை முடி இருப்பவர்கள் எந்த மாதிரியான விஷயங்களை தவிர்க்க வேண்டும் என இங்கே தெரிந்து கொள்வோம்.

அதிகப்படியாக கூந்தலை அலசுதல்
சுருட்டை முடி இருப்பவர்களுக்கு இயற்கையாகவே கூந்தலில் எண்ணெய் பசை குறைவாக இருக்கும். இதில் அடிக்கடி கூந்தலை அலசுவது உங்கள் கூந்தலின் எண்ணெய் தன்மையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கூந்தல் வறண்டு போய் உதிர ஆரம்பித்து விடும். மேலும் பொடுகு, பிளவுபட்ட முடி நுனிகள் போன்ற கூந்தல் பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
சல்பேட் ஷாம்பு பயன்படுத்த கூடாது
சுருட்டை முடி இருப்பவர்கள் சல்பேட் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தக் கூடாது. இதிலுள்ள கெமிக்கல்கள் உங்கள் சுருட்டை முடிகளுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும். இது சுருட்டை முடிகளை மேலும் உலர்வாக்கும். எனவே சுருட்டை முடி இருப்பவர்கள் சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள்.
தவறான சீப்பை பயன்படுத்துதல்
சுருள் முடி இருப்பவர்களுக்கு தலைவாருதல் ஒரு கஷ்டமான காரியமாக இருக்கலாம். சுருள் முடி இருப்பவர்கள் சிக்கலை அதிகமாக சந்திப்பதால் அகலமான பல் கொண்ட சீப்புகளை பயன்படுத்துவது நல்லது. மெல்லிய மற்றும் நெருக்கமான பல் கொண்ட சீப்புகள் உங்கள் கூந்தலை மோசமாக்க வாய்ப்பு உள்ளது. கூந்தல் உடைந்து போக வாய்ப்புள்ளது.
ஈரமான கூந்தலில் தலைவாரக் கூடாது
சுருள் முடி இருப்பவர்கள் ஈரமான கூந்தலில் தலைவாரக் கூடாது. அது உங்கள் கூந்தலை மேலும் மோசமாக்க வாய்ப்பு உள்ளது. ஈரமாக இருக்கும் போது மயிர்க்கால்கள் பலவீனமாக இருக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர விட்டு அதற்குப் பிறகு சீவுங்கள்.
வெறும் ஹேர் ட்ரையரை பயன்படுத்தக் கூடாது
பொதுவாக கூந்தல் வேகமாக உலர ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது உண்டு. வெறும் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது உங்கள் சுருட்டை முடியை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்த வரை டிஃப்பியூசர் இணைப்புடன் கூடிய ஹேர் ட்ரையரை பயன்படுத்துங்கள். இது உங்கள் கூந்தலை உலர்த்துவதோடு சுருள் முடியையும் அழகாக பராமரிக்க உதவுகிறது.
ஆல்கஹால் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்
பொதுவாக கூந்தல் பராமரிப்பில் ஆல்கஹால் ஒரு உலர்த்தும் பொருளாக செயல்படுகிறது. ஆனால் இந்த ஆல்கஹால் பயன்பாடு உங்கள் சுருள் முடிக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது. இது தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெயை அழிக்கும். சுருட்டை முடியை மேலும் மோசமாக்கும். மேலும் காலப்போக்கில் கூந்தல் உடைந்து போக கூடும்.
செயற்கை வாசனை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்
ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் மற்றும் ஸ்டைலிங் பொருட்கள் உட்பட பல பராமரிப்புகளில் செயற்கை வாசனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயற்கை வாசனைகள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனால் உச்சந்தலையில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பொடுகு, அரிப்பு ஏற்பட்டு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே நறுமணம் இல்லாத இயற்கை வாசனைப் பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இது உங்கள் சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் போஷாக்குடன் வைத்திருக்கவும் உதவி செய்யும்.



Click it and Unblock the Notifications