Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுருட்டை முடியை நேராக்க வேண்டுமா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்துக்கு 2 முறை போடுங்க...
Hair Care Tips In Tamil: சுருட்டை முடியானது ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும் தான். ஆனால் அந்த சுருட்டை முடி உள்ள ஒவ்வொருவருமே தங்கள் தலைமுடியை நேராக்க விரும்புவார்கள். ஏனெனில் சுருட்டை முடியைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினம்.
ஆகவே இந்த மாதிரியான முடியைக் கொண்டவர்கள் தங்கள் முடியை நேராக்க ஹேர் ஸ்ட்ரைட்னிங் கருவிகள், கெரட்டின் மற்றும் ஸ்மூத்னிங் போன்ற கெமிக்கல் சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களால் தலைமுடிக்கு அடிக்கடி பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி சேதமடைந்து, பலவீனமாகி அதன் ஆரோக்கியம் பாழாகி, தலைமுடி உதிரத் தொடங்கும்.
நீங்கள் உங்கள் சுருட்டை முடியை நேராக்க முயற்சிப்பவராயின், தலைமுடிக்கு சேதம் விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு ஹேர் பேக்கை தயாரித்து பயன்படுத்தினால், தலைமுடியும் நேராகும், முடியின் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது தலைமுடியை நேராக்கும் சில ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.
ஹேர் மாஸ்க் #1
* ஒரு பௌலில் நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஹேர் மாஸ்க் #2
* ஒரு பௌலில் 1 கப் தேங்காய் பால், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசி விட்டு, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
ஹேர் மாஸ்க் #3
* சுருட்டை முடி இருப்பவர்களின் தலைமுடி எப்போதும் வறண்டு இருக்கும். இந்த வறட்சி நீங்கி, தலைமுடி நேராக வேண்டுமானால், இந்த ஹேர் மாஸ்க்கை போடலாம்.
* அதற்கு ஒரு பௌலில் 1/4 கப் பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முடியில் உள்ள சுருட்டை நீங்கி, முடி நேராகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஹேர் மாஸ்க் #4
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 3-5 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் தடவி, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முடிந்தால், இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
* பிறகு மைல்டு ஷாம்பைப் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
ஹேர் மாஸ்க் #5
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 3-4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை தலைமுடியில் நன்கு தடவி குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் மாஸ்க்குகள் அனைத்தும் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் தலைமுடியை நேராக்கலாம். மேலும் தலைமுடி உதிர்வதையும் தடுக்கலாம். முக்கியமாக தலைமுடி நன்கு மென்மையாக பட்டுப்போன்று இருக்கும்.



Click it and Unblock the Notifications