Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
உங்க முடி உதிர்வை குறைச்சு முடியை ஆலவிழுது மாதிரி வளர வைக்கணுமா? இந்த ஈஸியான ஹேர் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க...
Hair Care: பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி, தங்களின் தலை முடி உதிர்வை பற்றி பெரிதும் கவலைப்படுவார்கள். பெரும்பாலும், 30-களின் பிற்பகுதியில் அல்லது 40 களின் முற்பகுதியில் உள்ள பெண்கள் பாலின-ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக புரதம், இரும்பு, துத்தநாகம் அல்லது பயோட்டின் காரணமாக முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கலாம்.
உணவுகள் மூலம் ஊட்டச்சத்துக்களை எடுத்து கொண்டாலும், அவற்றின் பராமரிப்பிலும் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது அவசியம். முடியின் பராமரிப்பிற்கு உதவும் பயனுள்ள ஹேர் மாஸ்க் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முட்டை
முட்டையில் புரதம் மற்றும் பி வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்தவை. அவை அனைத்து முடி வகைகளிலும் சிறப்பாக செயல்படுகின்றன. தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. முட்டையின் மஞ்சள் கரு சரும பாப்பிலா செல்களில் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
தேவையான பொருட்கள்
முட்டை - 1
பால் - 1 கப்
ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
செயல்முறை
முட்டையை ஒரு சுத்தமான கப்பில் ஊற்றி நன்றாக அடித்து, மற்ற பொருட்களுடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும்.பின் தலைமுடியை ஷவர் கேப் வைத்து மூடி 20 நிமிடங்கள் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முடியை அலசவும்.
கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை முடி வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது முடியின் இயற்கையான கருமை நிறத்தைத் தக்க வைக்கவும், இளநரையை தடுக்கவும் செய்கின்றன. தேங்காய் எண்ணெயின் ஊடுருவக்கூடிய பண்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முடியின் புரத இழப்பை ஊக்குவிக்கின்றன. இது முடி வளர்ச்சிக்கு உகந்த ஒரு சிறந்த ஹேர் மாஸ்க். வாரம் இருமுறை பயன்படுத்துவது, நல்ல பலனை தரும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 3 கொத்து
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
செயல்முறை
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு பொரித்து அடங்கும் வரை சூடாக்கவும். எண்ணெயின் வெதுவெதுப்பான வெப்பநிலைக்கு வரும் வரை ஆறவிடவும். பின் உச்சந்தலையிலும் முடியிலும் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் ஷாம்பூ போட்டு குளிக்கவும்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயில் புரத சத்து நிறைந்துள்ளது. ஆமணக்கு பிளவுபட்ட முனைகள், முடி சேதம் மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் முடியின் அடர்த்தியையும் அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள்
ஆமணக்கு எண்ணெய் - 2 ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 2 ஸ்பூன்
முட்டை - 1
செயல்முறை
ஆமணக்கு எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை மிதமாக சூடேற்றி முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியின் மீது தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும்.
வாழைப்பழ ஹேர் மாஸ்க்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள. இவை முடி உதிர்தலை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் இது வருடத்தின் அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கின்றன.
தேவையான பொருட்கள்
நன்றாக பழுத்த வாழைப்பழங்கள் - 2
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
செயல்முறை
ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும். தலை முழுவதும் இந்த கலவையை நன்றாக தடவி ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.



Click it and Unblock the Notifications

