Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
முக அழகை பராமரிப்பதில் அதீத கவனம் செலுத்தும் பெண்களின் நேரத்தை எளிமையாக்கும் வகையில் மேக்கப் கிட்டுகள் புதுமையாக வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பிளவேருக்கு ஏற்ற வகையில் பேஸ் மாஸ்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் இருக்கும் சவாலான விஷயம் என்னவென்றால், தங்களுக்கு சரியானது எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால், முக அழகு பாதிக்கும் என்பதால், பேஸ் மாஸ்க் தேர்ந்தெடுக்கும் முன்பும், பின்பும் செய்ய வேண்டியது என்ன என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஃபேஸ் மாஸ்க்
முகத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க கிளீன்சர் மற்றும் மாய்ஸ்ரைசர் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை பேஸ் மாஸ்க்கை தேர்வு செய்வதிலும் கொடுக்க வேண்டும். தோலுக்கு ஏற்றவையாக இருப்பதை உறுதி செய்த பின்னரே அந்த பேஸ் மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற அலர்ஜி மற்றும் தோல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முகத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அழகை கெடுத்துவிடும் என்பதால் கூடுதல் அக்கறைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்கை தேர்ந்தெடுங்கள்.
முகத்தை கழுவுதல்
சரியான பேஸ் மாஸ்க்கை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்றால் அதனை உடனடியாக அப்ளை செய்ய வேண்டாம். பேஸ் மாஸ்க் அப்ளை செய்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். ஏற்கனவே கிளீன்சர் பயன்படுத்துபவர் என்றால் அதனை உபயோக்கிக்கலாம். இங்கும் நீங்கள் கவனிக்கவேண்டிய ஒன்று உள்ளது. கிளீசரும் உங்கள் முகத்துக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். அந்த கிரீம் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஃபேஸ் மாஸ்க்குக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். பொருத்தமில்லாத இரண்டும் மிக்ஸாகும்போது முகத்தின் பொலிவு கிளாமராக இருக்காது.
கைகளின் சுத்தம்
முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு உங்களின் கைகளை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கைகளால் எடுத்து பேஸ் மாஸ்க் மற்றும் கிளீன்சர்களை அப்ளை செய்வீர்கள் என்பதால், கைகளில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களும் முகப்பொலிவை கெடுத்துவிடும். மேக்கப் நன்றாக இருக்க வேண்டும் என ஆசைபடுபவர்கள் அனைவரும் இதனை சரியாக பின்பற்றுவார்கள். மேக்கப் போடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்.
பேஸ் மாஸ்க் அப்ளை செய்வது
முகத்தில் பேஸ் மாஸ்க்கை அப்ளை செய்த பிறகு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கால அளவில் மட்டும் முகத்தில் வைத்திருங்கள். கூடுதல் நேரங்கள் வைத்திருந்தாலும் எந்தவித பலன்களும் இருக்காது. கூடுதல் நேரம் இருந்தால் இன்னும் பொலிவு அதிகம் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால், அது தவறு. பேஸ் மாஸ்க்கில் கொடுக்கப்பட்டிருக்கும் பயன்படுத்தும் முறைகளை சரியாக படித்து, அதன்படி உபயோகியுங்கள். மேலும், பேஸ் மாஸ்க் இருக்கும் அளவில் மட்டும் அதனை அப்ளை செய்யுங்கள். அளவில் கூடுதலாக வேண்டும் என நினைத்து இழுக்க வேண்டாம்.
நிதானமாக உலர விடவும்
பேஸ் மாஸ்க்கை பயன்படுத்தியவுடன், ஓய்வெடுக்கவும், அதை முழுமையாக உலர வைக்கவும். பெரும்பாலான பேஸ் மாஸ்க் உலர சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்தில், பேஸ் மாஸ்க் உலர்ந்ததால் உங்கள் தோலில் இறுக்கமான உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம்.
பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடலாம்..
வெள்ளரிக்காய் மாஸ்க்
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்க வைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.
தேன், முட்டை
தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
தக்காளி பழ மாஸ்க்
ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.
வேப்பிலை மாஸ்க்
வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.
ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது.



Click it and Unblock the Notifications











