Latest Updates
-
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க..
தீபாவளியில் நீங்க வெள்ளையா அழகா தெரியணுமா? அப்ப இந்த சந்தன ஃபேஸ் பேக்கை போடுங்க...
Diwali Beauty Tips In Tamil: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீபாவளி நாளில் வீட்டிற்கு விருந்தினர்கள், நண்பர்கள் என அனைவரும் வருகை தருவார்கள். அப்போது புத்தாடைகளை அணிந்து அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று அனைவருமே விரும்புவோம். ஆனால் உங்கள் முகம் பொலிவிழந்து கருப்பாக உள்ளதா?
அப்படியானால் உடனே உங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கத் தொடங்குங்கள். அதுவும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்கி, சருமத்தை பளிச்சென்று மாற்றும் ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், தீபாவளி நாளில் அழகாகவும், பிரகாசமாகவும் ஜொலிக்கலாம்.

அதற்கு அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சந்தன பவுடர் இருந்தால், அதைக் கொண்டு ஒருசில ஃபேஸ் பேக்கை போட்டு வந்தாலே போதும். சந்தனம் குளிர்ச்சியானது மட்டுமின்றி, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், நிறைய நன்மைகளை வழங்கும்.
அந்த நன்மைகளாவன: சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும், சரும கருமையைப் போக்கும், முகப்பரு மற்றும் அவற்றால் ஏற்படும் தழும்புகளைப் போக்கும். இவ்வளவு நன்மைகளை வழங்கும் சந்தனத்தை சரும பிரச்சனைகளுக்கு ஏற்ப எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. முகப்பருக்களைப் போக்கும் சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் சந்தனப் பவுடர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 சிட்டிகை கற்பூரம் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை இரவு தூங்கும் போது சருமத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். ஆனால் சோப்பு எதையும் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், சருமத்தில் அரிப்பு ஏற்படும்.
2. முகப்பரு தழும்புகளைப் போக்கும் சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. சரும சருமையைப் போக்கும் சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர், சிறிது ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை வெயிலின் தாக்கத்தால் கருமையான பகுதிகளான முகம், கழுத்து, கைகளில் தடவி காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரம் 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமை அகலும்.
4. சீரற்ற சருமத்திற்கான சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. பொலிவான சருமத்திற்கான சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
6. சரும நிறத்தை அதிகரிக்கும் சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications