Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கொலாஜென் அதிகமாக இருக்கும் இந்த உணவுகள் உங்க ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் சருமத்தை ஜொலிக்க வைக்குமாம்...!
சருமத்தை பராமரிப்பதில் நாம் அனைவருமே கூடுதல் கவனத்துடன் இருக்கிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. மிருதுவான மற்றும் ஊட்டமளிக்கும் சருமத்தை வைத்திருக்க நம்மில் பெரும்பாலோர் ஆரோக்கியமான முறையைப் பின்பற்ற முயற்சிக்கிறோம்.
ஆரோக்கியமான சருமத்தைப் பெற நாம் எப்போதும் சீரம், எண்ணெய் மற்றும் மாய்ஸ்சரைசரின் அடுக்குகளைப் பயன்படுத்துகிறோம் என்று அர்த்தமல்ல. சில உணவுகள் மூலமும் சருமத்தை ஆரோக்கியமானதாக மாற்றலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது ஆகியவை நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சருமத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு ஊட்டச்சத்து கொலாஜன் ஆகும். இது இணைப்பு திசுக்களை உருவாக்க பயன்படுகிறது, இது மற்ற அனைத்து திசுக்களையும் ஒன்றாக வைத்திருக்கிறது. எலும்புகள், மூட்டுகள், இரத்தம், தசைகள் மற்றும் குருத்தெலும்புகளில் கொலாஜன் உள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை வழங்குகிறது.
கொலாஜன்
கொலாஜன் இயற்கையாகவே பெரும்பாலும் விலங்கு புரதங்களில் காணப்படுகிறது; இருப்பினும், தாவர உணவுகளில் நம் உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அமினோ அமிலங்கள், வைட்டமின் சி, துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்றவை நம் உடலில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவும் ஊட்டச்சத்துக்களாகும். உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் உணவுகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சிக்கன்
அதிக அளவு கொலாஜன் உள்ள உணவுகளில் முக்கியமானது சிக்கன். இது உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் விரும்பி உண்ணப்படுகிறது. சிக்கனில் போதுமானஅளவு இணைப்பு திசு உள்ளது, அதிலிருந்து போதுமான கொலாஜனைப் பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகம் எண்ணெய் பயன்படுத்தாத வழிகளில் சிக்கனை சமைத்து சாப்பிடவும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இது வைட்டமின் சி மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது, மேலும் இது ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த வலுவான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. கூடுதலாக, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் உதவுகிறது.
மீன்
மீன் கொலாஜனின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. அனைத்து வகை மீன்களிலும்குறிப்பிட்ட அளவு அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை நம் உடலில் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பால் பொருட்கள்
இந்தியாவில் அதிகளவு மக்களால் நுகரப்படும் பொருட்களில் ஒன்றாக பால் இருக்கிறது. பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றும் துத்தநாகத்தால் செறிவூட்டப்பட்டுள்ளன. உடலில் கொலாஜன் உற்பத்திக்கு இது மிகவும் முக்கியமான கனிமமாகும்.
பருப்பு
பருப்பு இந்திய உணவு வகைகளில் முதன்மையானது. நாடு முழுவதும் பருப்பு வகைகள் பல்வேறு வழிகளில் உணவில் சேர்க்கப்படுகிறது. மலிவானது மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியது என்பது தவிர, பருப்பு மிகவும் ஆரோக்கியமானது. இது தாமிரம் மற்றும் மாங்கனீசு உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.



Click it and Unblock the Notifications
