Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
மார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா?... என்ன பண்ணினா சரியாகும்?...
மார்பகங்கள் அடியில் அரிப்பு,எரிச்சல் போன்ற தோல் வியாதிகள் நம்மில் பல பேருக்கு காணப்படுகிறது. இது 'இன்டர் ட்ரை கோ'என அழைக்கப்படுகிறது.
மார்பகங்கள் அடியில் அரிப்பு,எரிச்சல் போன்ற தோல் வியாதிகள் நம்மில் பல பேருக்கு காணப்படுகிறது. இது 'இன்டர் ட்ரை கோ'என அழைக்கப்படுகிறது. இதனால் வீக்கம், எரிச்சல், அரிப்பு, தோல் சிவத்தல் மற்றும் தோல் வறண்டு போதல் போன்றவைகள் ஏற்படுகிறது.

இது அசௌகரியங்களையும் வலிகளையும் ஏற்படுத்துகிறது. இந்த சரும பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் பல்வேறு விதமாக உள்ளன. இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நமது வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே நாம் குணம் அடையலாம். நமது சமையல் அறையில் உள்ள எளிய பொருட்களுக்குள் ஒளிந்து இருக்கும் மருத்துவ குணங்கள் நம்மை எப்போதும் ஆச்சரியத்தில் உள்ளாக்குது. மார்பக அடியில் உள்ள தோல் வியாதிகளை இந்த பொருட்களை கொண்டு எவ்வாறு குணப்படுத்துவது என பார்க்கலாம்.

1. ஆப்பிள் சீடர் வினிகர்
பாக்டீரிய தொற்று மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கும் மூலப்பொருட்கள் ஆப்பிள் சீடர் வினிகரில் அதிகம் உள்ளதால் இது மைக்ரோப் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் ரேசஸ் தொல்லைக்கு சிறந்த மருந்தாக அமையும். ஒரு வேளை இந்த தோல் அழற்சிகள் நுண்ணுயிர்களால் ஏற்படாமல் கெமிக்கல் அலர்ஜியினால் ஏற்பட்டால் கூட இந்த வினிகர், ரேசஸை விரைவில் குணப்படுத்தி விடும். ஏனென்றால் ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்தின் அல்கலைனிட்டியை அதிகமாக்கி, தோலின் பி.ஹெச் அளவை சரியான முறையில் மாற்றும். ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் நாள்தோறும் இரண்டு முறை தேய்க்க வேண்டும்.

2. டீ ட்ரீ ஆயில்
இந்த எண்ணெயில் பூஞ்சை தொற்றை எதிர்க்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளதால் எல்லா விதமான சரும பிரச்சினைகளுக்கும் இது நல்ல மருந்தாக அமையும். இந்த ஆயில் சரும வியாதிகளை குணப்படுத்துவது மட்டுமில்லாமல், பூஞ்சை தொற்றுகள் சருமத்தில் மறுபடியும் ஏற்படாமல் இருக்க உதவி செய்யும். மேலும் இது வறண்ட சருமத்தை சரியாக்கி தோல் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கும். 6 முதல் 8 துளிகள் டீ ட்ரீ ஆயிலை இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும். இதை கொண்டு ஐந்து நிமிடம் மசாஜ் செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதை குளித்த பிறகும் இரவு உறங்கும் முன் சருமத்தில் தடவி வர வேண்டும்.

3. துளசி
துளசியில் ஆன்டிசெப்டிக், பூஞ்சை எதிர்ப்பு மூலப்பொருள், வீக்கத்தையும் வலிகளையும் குறைக்கும் பண்புகள் அதிகம் உள்ளதால் எல்லா விதமான தோல் அழற்சிக்கும் இது சிறந்த தீர்வு ஆகும். வெயிலில் அலைவதால் ஏற்படும் சரும பிரச்சினையாக இருந்தாலும் சரி, அல்லது அலர்ஜி, இன்ஃபெக்சன் போன்றவைகளால் ஏற்படும் சரும பிரச்சினையாக இருந்தாலும் சரி துளசி அருமையான மருந்தாகும். துளசியில் இருந்து சாறு எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் நாள்தோறும் மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். அதே போல புதிய துளசி இலைகளை நசுக்கி அதை ரோஸ் வாட்டருடன் கலந்து சரும பகுதியில் தடவி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

4. சோற்று கற்றாழை
சோற்று கற்றாழையில் உள்ள ஆன்டி செப்டிக், வீக்கம் குறைக்கும் பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், எல்லா விதமான தோல் வியாதிக்கும் இதை சிறந்த மருந்தாக மாற்றுகிறது. இயற்கையாகவே சோற்று கற்றாழையில் விட்டமின் ஈ மற்றும் சருமத்தை ஈரப்படுத்தும் பண்புகள் அதிகமாக இருப்பதால் இது தோல் அரிப்பு, எரிச்சல், தோல் சிவத்தல், வறண்டு போதல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும். புதியதாக பறித்த சோற்று கற்றாழையை வெட்டி, உள்ளே உள்ள ஜெல் போன்ற வெள்ளை சாற்றை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு கழுவி விட வேண்டும். நாள்தோறும் இரண்டு முறை இதை தொடர்ந்து செய்து வர சரும வியாதிகள் சரியாகும்.

5. பூண்டு
நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகள் பூண்டில் அதிகம் இருப்பதால் காலம் காலமாக இது சரும வியாதிகளுக்கு சிறந்த மருத்தாக பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் இது சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது மற்றும் சருமத்தை விரைவாக குணம் அடைய செய்கிறது. நான்கு பல் பூண்டு எடுத்து அதை நன்றாக அரைத்து மார்பக அடியில் தடவி பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு முறை இதை செய்து வர சரும பிரச்சினைகள் விரைவில் சரியாகும். மேலும் நமது சாப்பாட்டிலும் அதிகமாக பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.

6. சோளமாவு
மார்பகங்கள் அடியில் ரேசஸ் வர மிக முக்கியமான காரணம் என்னவென்றால், அதிக வியர்வையினால் அந்த இடம் ஈரம் மிகுந்து காணப்படுவது தான். அதனால் மிக எளிதாக இங்கு பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டு விடுகிறது. சோளமாவுக்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் சக்தி இருப்பதால் இது மார்பகங்கள் அடியில் தடவ ஏற்றது. இது எரிச்சல் மற்றும் அரிப்புகளை குறைப்பதோடு, இனிமையான உணர்வுகளை ஏற்படுத்தும். ஆனால் சோளமாவு தடவிய பிறகு வியர்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது மேலும் பூஞ்சை வளர வழி வகுக்கும். சோளமாவு தடவுவதற்கு முன்பும் பின்பும் சருமம் ஈரப்பதமின்றி காய்ந்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முதலில் பாதிக்கப்பட்ட சரும பகுதியை சோப் மற்றும் நீரால் நன்கு கழுவி, பின் டவலால் துடைத்து தேவையான அளவு சோளமாவு போட வேண்டும். நாள்தோறும் இரண்டு முறை இதை செய்து வர ரேசஸ் க்கு விரைவில் குட் பை சொல்லிடலாம்.



Click it and Unblock the Notifications