மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்ப சோம்பை இப்படி யூஸ் பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். பெரிய மார்பகங்கள் பெண்களின் அழகை அதிகரித்து காண்பிப்பதோடு, உடுத்தும் உடைகள் அனைத்தும் அந்த பெண்களுக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால் இப்படிப்பட்ட அமைப்பு அனைத்து பெண்களுக்கும் கிடைப்பதில்லை. பல பெண்கள் தங்கள் மார்பகங்கள் சிறியதாக இருப்பதை நினைத்து வருந்துவார்கள்.

How To Use Fennel Seeds For Breast Enlargement

அதோடு மார்பகங்களை விலையுயர்ந்த அழகு சிகிச்சையின் மூலம் பெரிதாக்கவும் முயற்சிப்பார்கள். ஆனால் இப்படி செயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்குவதால், பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இயற்கை முறையில் மார்கங்களைப் பெரிதாக்கும் சில வழிகளைக் கொடுத்துள்ளது.

இந்த இயற்கை வழிகள் அனைத்தும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு பொருளை அடிப்படையாக கொண்டிருப்பதால், செலவும் குறைவு. அது என்ன பொருள் என்று கேட்கிறீர்களா? அது தான் சோம்பு. சரி, இப்போது அந்த சோம்பைக் கொண்டு மார்பகங்களைப் பெரிதாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

சோம்பு கொண்டு டீ தயாரித்து குடிப்பதன் மூலம், மார்பகங்களைப் பெரிதாக்கலாம். இங்கு சோம்பு டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

* நீர் - 1 கப்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சோம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, சர்க்கரை சேர்த்து கலந்தால், சோம்பு டீ தயார். இந்த டீயை தினமும் பெண்கள் குடித்து வர மார்பகங்கள் பெரிதாகும்.

வழி #2

வழி #2

மார்பகங்களைப் பெரிதாக்க உதவும் வழிகளுள் சிறந்தது மசாஜ் தான். மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம், அப்பகுதியில் இரத்த ஓட்டம் சீராகி, மார்பக அளவு விரைவில் பெரிதாகும். கீழே மசாஜ் செய்வதற்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

* சோம்பு எண்ணெய் - 50 மிலி

* ஜெரனியம் எண்ணெய் - 6 துளிகள்

* பாதாம் எண்ணெய் - 50 மிலி

* யலாங் யலாங் எண்ணெய் - 3-4 துளிகள்

மசாஜ் செய்யும் முறை:

மசாஜ் செய்யும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களை ஒன்றாக கலந்து, மார்பகப் பகுதியில் தடவி ஒரு பக்க மார்பை வலது பக்கம் நோக்கியும், மற்றொரு பக்க மார்பை இடது பக்கம் நோக்கியும் சுழற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்ய மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மார்பக அளவு பெரிதாகும்.

வழி #3

வழி #3

இன்னும் எளிய வழி வேண்டுமானால், அவ்வப்போது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம், ஒரே வாரத்தில் மார்பக அளவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #4

வழி #4

சோம்பு கொண்டு மார்பக அளவைப் பெரிதாக்க உதவும் இந்த வழியானது பல பெண்களால் முயற்சிக்கப்பட்டது. இந்த வழியை மேற்கொள்ள தேவையான பொருட்களாவன,

* சோம்பு - 1 டீஸ்பூன்

* மீன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமானதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் மார்பகங்களில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், மார்பக அளவில் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Fennel Seeds For Breast Enlargement

Want to know how to use fennel seeds for breast enlargement? Read on to know more...