Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்...
அக்குளில் வரும் வலி மிகுந்த கட்டிகளைப் போக்க சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல், வலியைக் குறைத்து கட்டிகளைப் போக்கலாம்.
சிலருக்கு அக்குளில் வலிமிக்க கட்டிகள் வரும். இந்த கட்டிகள் நிணநீர் முடிச்சுக்களில் ஏற்படும் வீக்கத்தால் வருபவை. நிணநீர் முடிச்சுக்களில் வீக்கம் ஏற்பட்டால், உடல் கிருமிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இருப்பினும் சில நேரங்களில் அது புற்றுநோயையும் குறிக்கும்.

அதற்காக அக்குளில் வரும் கட்டிகள் அனைத்துமே புற்றுநோய் கட்டிகள் என்று அர்த்தமில்லை. அக்குளில் வரும் வலி மிகுந்த கட்டிகளைப் போக்க சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல், வலியைக் குறைத்து கட்டிகளைப் போக்கலாம்.

சுடுநீர் சிகிச்சை
சுடுநீரை துணியில் நனைத்துப் பிழிந்து, கட்டிகள் இருக்கும் அக்குளில் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், அக்குள் கட்டிகள் விரைவில் நீங்கும்.

மசாஜ்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை விரலில் தொட்டு, கட்டிகள் உள்ள அக்குளில் மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்தால், அக்குளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, வீக்கம் குறைந்து சரியாகும்.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை தினமும் உட்கொண்டு வர வேண்டும். சருமத்தில் பிரச்சனைகள் வருவதற்கு குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள் தான் காரணமாக இருக்கும். அதிலும் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியமானது. ஆகவே இதனை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

தர்பூசணி
தர்பூசணியை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தத்தை சுத்தம் செய்து, வீக்கத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வீக்கத்தைக் குறைக்கும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, காட்டன் பயன்படுத்தி கட்டிகள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வர வலிமிக்க கட்டிகள் நீங்கும்.

ஜாதிக்காய்
ஒரு கப் நீரில் 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனை தினமும் பலமுறை அக்குளில் தடவி வர வேண்டும். இதனால் அக்குளில் இருக்கும் கட்டிகள் மறையும்.

மஞ்சள்
மஞ்சள் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வர, விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications