Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
அழகை அதிகரிக்க... மலைக்க வைக்கும் 'மலைப்பாம்பு மசாஜ்' செஞ்சுக்கோங்க...
மசாஜ் செய்தால் உடலில் உள்ள வலிகள் மற்றும் மன அழுத்தம் நீங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் மசாஜ் செய்தால் சருமம் பொலிவு பெறும் என்பதும் தெரியும். அத்தகைய மசாஜில் நிறைய உள்ளன. அதில் பெரும்பாலானோருக்கு தெரிந்தது ஆயில் மசாஜ் தான். அந்த மசாஜ் செய்வதற்கு மசாஜ் பார்லர் சென்று, இளம் பெண்களின் கையால் செய்து கொள்ள விரும்புவோம். ஆனால் அந்த ஆயில் மசாஜை தாண்டியும், மசாஜ் பார்லரில் ஒரு வித்தியாசமான, அனைவரையும் பயத்திற்கு உள்ளாக்கும் ஒரு மசாஜ் உள்ளது.
அது என்ன மசாஜ் என்று கேட்கிறீர்களா? அது தான் மலைப்பாம்பு மசாஜ். இந்த மசாஜ் செய்வதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. பொதுவாக அந்த மசாஜ் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் செய்யப்பட்டு வருகிறது. மேலம் பிலிப்பைன்ஸில் உள்ள ஸிபூவில் இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு, 4 பெரிய மலைப்பாம்புகளால் மசாஜ் செய்துவிடுகிறார்கள்.
இங்கு அந்த 'மலைப்பாம்பு மசாஜ்' பற்றிய சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பார்த்து முடிந்தால் ஒருமுறையாவது செய்து கொள்ளுங்கள்.

பாம்பு ஒன்றும் செய்யாதா?
மலைப்பாம்புகள் கொண்டு மசாஜ் செய்வதற்கு முன்பு, அவற்றிற்கு 10 சிக்கன் துண்டுகளைக் கொடுத்து, அதன் பசியை முற்றிலும் ஆற்றிவிட்டு, பின் வாடிக்கையாளர்களின் உடலின் மேல் வைப்பதால், பாம்புகள் கொத்தாமல் மெதுவாக ஊர்ந்து செல்லும்.

அட்ரினல் ஹார்மோன்கள் சுரக்கப்படும்
பொதுவாக பயத்தினால் அட்ரினல் என்னும் ஹார்மோன் சுரக்கப்படும். அதேப் போல் பாம்புகளை உடலின் மீது வைக்கும் போது, பயத்தினால் உடலில் அட்ரினல் ஹார்மோன்களானது அதிகம் சுரக்கப்படும்.

மசாஜின் போது செய்யக்கூடாதவை
* பாம்புகளை உடலின் மீது வைத்த பின்னர், பாம்புகளின் மீது காற்றினை ஊதக்கூடாது.
* முக்கியமாக கூச்சல் போடக்கூடாது. ஒருவேளை அப்படி கூச்சல் போட்டால், பாம்பானது எதிரி என்று நினைத்து தாக்கிவிடும்.
* எழுந்து ஓட முயலக்கூடாது.

நன்மைகள்
* பாம்புகள் உடலில் ஊர்ந்து செல்லும் போது, உடலின் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்.
* உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து மன அழுத்தம் ஏற்படாமல் இருந்தால், சருமமானது தானாக பொலிவுற ஆரம்பிக்கும்.

குறிப்பு
சாதாரண மசாஜ் பார்லரில், மசாஜ் செய்யும் நபரிடம் 'சில்மிஷம்' செய்வது போல், இந்த மசாஜ் செய்யும் போது செய்துவிடாதீர்கள். இல்லையெனில் மலைப்பாம்புக்கு 'குர்குரே' ஆகி மண்டையைப் போட வேண்டியது தான்.



Click it and Unblock the Notifications
