Latest Updates
-
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இதுவரை கேட்டிராத சில பியூட்டி ட்ரிக்ஸ்...
சருமம் அழகாகவும், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கவும் அழகு சாதனப் பொருட்கள் நிச்சயம் வேண்டும் என்று யார் சொன்னது. கடவுள் நமக்கு கொடுத்த பல்வேறு இயற்கை பொருட்கள் இருக்க, நாம் ஏன் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த அழகு சாதனப் பொருட்களால் சருமம் தற்காலிகமாக அழகாக வெளிப்படுமே தவிர, நாளடைவில் அந்த பொருட்கள் சருமத்தை முதுமை தோற்றத்திற்கு கொண்டு வந்துவிடும்.
ஆகவே சருமத்தின் அழகை பாதுகாக்கவும், அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தாமல் சருமத்தை அழகாக்கவும் ஒருசில பியூட்டி ட்ரிக்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவை அனைத்தும் எளிமையாக இருப்பதோடு, எந்த ஒரு பக்கவிளைகளையும் ஏற்படுத்தாது. மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ட்ரிக்ஸ்களை முயற்சித்தால், பல்வேறு அழகு பிரச்சனைகளைப் போக்கலாம்.
சரி, இப்போது அந்த பியூட்டி ட்ரிக்ஸ்களைப் பார்ப்போமா!!!

குளிர்ச்சியான ஸ்பூன்
கண்களை அழகாக்குவதற்கு கண்களுக்கு மஸ்காரா போடுவோம். அப்படி மஸ்காரா போடும் போது, அது சற்று பட்டையாகிவிட்டால், அப்போது குளிர்ச்சியாக இருக்கும் ஸ்பூனைக் கொண்டு அதிகப்படியாக இருக்கும் மஸ்காராவை எடுத்தால், மஸ்காரா கண்களில் பரவாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு
சிலருக்கு காலை எழுந்ததும் கண்கள் வீங்கி காணப்படும். இப்படி ஏற்படும் வீக்கத்தை உடனே குறைக்க, உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் 6 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் மறையும்.

காபி தூள்
முதுமைத் தோற்றத்தைத் தடுப்பதில் காபி தூள் சிறந்த பொருள். அதற்கு காபி தூளில் சிறிது தண்ணீர் கலந்து, அதனை முகத்தில் தடவி தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முதுமைத் தோற்றம் தடைப்படும்.

மயோனைஸ்
மயோனைஸை கூந்தலில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளித்து, உலர வைத்தால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் நன்கு அழகாக பட்டுப் போன்று இருக்கும்.

எலுமிச்சை
நெயில் பாலிஷ் கட்டி சேர ஆரம்பித்தால், அப்போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஊற வைத்தால், நெயில் பாலிஷ் மென்மையாவதோடு, அழகான நிறத்தையும் கொடுக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தைக் கொண்டு சருமத்தை தேய்த்தால், அதிலிருந்து வெளிவரும் ஒருவித அமிலம் முகப்பருக்களை நீக்குவதோடு, சரும பிரச்சனைகளையும் போக்கும்.

குளிர்ச்சியான நீர்
வறட்சியான சருமம் உள்ளவர்கள், குளிர்ச்சியான உப்பு நீரில் கைகள் மற்றும் கால்களை ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் அழகாக வெளிப்படும்.

தேங்காய் எண்ணெய்
மிகவும் சிறந்த மாய்ஸ்சுரைசர் என்று சொன்னால், அது தேங்காய் எண்ணெய் தான். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை முகத்தில் தடவி 10 நிமடம் மசாஜ் செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், வறட்சியில்லாமலும் இருக்கும்.

வெண்ணெய்
நகங்கள் பொலிவிழந்து மங்கிய நிறத்தில் காணப்படுகிறதா? அப்படியெனில் தினமும் இரவில் வெண்ணெயை நகங்களில் தடவி ஊற வைத்து வந்தால், நகங்கள் பொலிவாக காணப்படும்.

வேர்க்கடலை
தினமும் பச்சையான வேர்க்கடலையை அரைத்து, அதனை தழும்புகள் உள்ள இடங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வந்தால், தழும்புகள் மறையும்.



Click it and Unblock the Notifications