Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்க வேண்டுமா? அப்ப இத படிங்க...
பண்டிகை காலங்கள் ஆரம்பமாகிறது. இனிமேல் தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டே இருக்கும். எனவே பல பெண்கள் கைகளை அழகுப்படுத்த மருதாணி, மெஹந்தி போன்றவற்றை வைப்பார்கள். இவ்வாறு கைகளுக்கு வைக்கும் போது, அவை விரைவிலேயே மங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி பலர், இவ்வாறு கையில் வைக்கும் மெஹந்தி எளிதில் போய்விடுவதால், வெறுத்து அதனை வைப்பதை தவிர்க்கின்றார்கள்.
எனவே இத்தகைய மெஹந்தியை நீண்ட நாட்கள் தக்க வைப்பதற்கு, ஒருசில ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றி, மருதாணியை வைத்தால், நிச்சயம் மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும். இப்போது, அந்த மெஹந்தி/மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருப்பதற்கு என்னவெல்லம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து பயன் பெறுங்கள்.

கைகளை நன்கு கழுவவும்
மெஹந்தி வைக்கும் முன், கைகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அதிலும் டோனர் கொண்டு சுத்தம் செய்து மிகவும் சிறந்தது.

கெட்டியான மெஹந்தியைப் பயன்படுத்தவும்
மெஹந்தி போடும் போது, நன்கு அடர்த்தியான கோடுகளைப் போடுவதால், அவை சருமத்தில் நன்கு ஊடுருவி, நீண்ட நாட்கள் இருக்கும்.

நீண்ட நேரம் வைத்துக் கொள்ளவும்
மெஹந்தியை கைகளுக்குப் போட்ட பின்னர், உடனே கழுவாமல், நீண்ட நேரம் வைத்திருந்தால், மெஹந்தியில் உள்ள நிறமானது சருமத்தில் நன்கு ஊடுருவி, நல்ல நிறத்துடன் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

இதை தவறாமல் செய்யவும்
மெஹந்தியை கைகளுக்குப் போட்ட பின்னர், எலுமிச்சை சாற்றில் சர்க்கரையைப் போட்டு சூடேற்றி, குளிர வைத்து, மெஹந்தியானது காய்ந்த பின்னர், அந்த கலவையை பஞ்சு கொண்டு கைகளில் தடவி, 2 மணிநேரம் ஊற வைத்தால், மெஹந்தியானது இன்னும் நல்ல நிறத்துடன் பிடிக்கும்.

வெஜிடேபிள் ஆயில்
மருதாணி போட்ட பின்னர், சிறிது வெஜிடேபிள் ஆயிலை கைகளுக்கு தடவி ஊற வைத்து, பின் கழுவினாலும் நீண்ட நாட்கள் மெஹந்தியானது இருக்கும்.

சோப்புகளை தவிர்க்கவும்
முக்கியமாக மெஹந்தி போட்டப் பின்னர், 24 மணிநேரத்திற்கு கைகளுக்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது.
மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் மெஹந்தியானது நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும்.



Click it and Unblock the Notifications