Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
பைக்கில் ஆபிஸ் போறவங்களா நீங்க? முதல்ல இத படிங்க...
தற்போது பஸ்களில் பயணித்து ஆபிஸ் செல்வோரின் எண்ணிக்கையை விட, பைக்கில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, பலருக்கு பைக் வாங்குவது ஒரு பெரிய கனவாக இருக்கும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான். பெண்கள் கூட அலுவலகத்திற்கு பைக்கில் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி பைக்கில் செல்பவர்கள், தவறாமல் சருமம் மற்றும் கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.
ஏனெனில் பைக்கில் செல்பவர்கள் காற்று, சூரிய வெப்பம், மழை என்று எந்த காலநிலையிலும் ஓட்டுவதால், அவர்கள் ஒருசிலவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக பைக்கில் பயணிப்பவர்கள் முகப்பரு, பிம்பிள், பழுப்பு நிற சருமம் என்று பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுமட்டுமின்றி அவர்களது கூந்தல், மென்மையிழந்து வறட்சியாக இருக்கும்.
எனவே பைக் ஓட்டுபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் அழகான சருமத்தைப் பெறலாம். இந்த குறிப்புகள் அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையே.

கிளின்சிங்
கிளின்சிங்கை தினமும் தவறாமல் செய்து வர வேண்டும். இதனால் அது சருமத்துளைகளைத் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு ரோஸ் வாட்டர் அல்லது பாலை, பஞ்சுருண்டையில் நனைத்து, முகம் மற்றும் கைகளை துடைக்க வேண்டும்.

டோனிங்
கிளின்சிங்கை தொடர்ந்து டோனிங் செய்ய வேண்டும். இது பைக் ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான். டோனிங் செய்வதால் முகப்பரு நீங்குவதோடு, திறந்த சருமத்துளைகள் முடும். அதற்கு பழங்கள் அல்லது காய்கறிகளின் சாற்றினை, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

சன் ஸ்க்ரீன்
எவ்வளவு தான் முகம் மற்றும் கைகளுக்கு ஸ்கார்ப் போட்டுக் கொண்டாலும், சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது. குறிப்பாக கண்கள், முகம், கழுத்து, முழங்கை, காது மற்றும் பாதங்களுக்கு மறக்காமல் தடவ வேண்டும். இதனால் சூரியனின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

ஃபௌண்டேஷன்
பெண்கள் பைக் ஓட்டும் போது, சன் ஸ்க்ரீன் தடவிய பின்னர், ஃபௌண்டேஷனை ஒரு கோட்டிங் கொடுக்க வேண்டும்.

சருமத்தை முற்றிலும் மூட வேண்டும்
பைக் ஓட்டும் போது, காற்று மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, கை மற்றும் முகத்திற்கு ஸ்கார்ப் கட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பைக் ஓட்டும் போது, தூசிகள் அதிகம் சருமத்தில் பட்டால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே முகத்திற்கு துணியையும், கைகளுக்கு மறக்காமல் கிளவுஸையும் அணிந்து கொள்ள வேண்டும்.

உதடு பராமரிப்பு
முக்கியமாக உதடுகளுக்கு அதிகப்படியான கவனம் வேண்டும். ஏனெனில் உதடுகளில் சூரியக்கதிர்கள் அதிகம் பட்டால், உதடுகள் விரைவில் நிறத்தை இழந்துவிடும். எனவே SPF உள்ள லிப் பாம்மை, லிப்ஸ்டிக் அல்லது லிப் கிளாஸ் போடும் முன் பயன்படுத்த வேண்டும். ஆண்கள் வெறும் SPF லிப் பாம்மை மட்டும் போட்டால் போதும்.

கூந்தல் பராமரிப்பு
பைக் ஓட்டும் போது ஹெல்மெட் போடும் முன், தலையில் துணியை கட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள் பைக் ஓட்டும் போது முடியை விரித்துக் கொண்டு இல்லாமல், கூந்தலை கட்டிக் கொண்டு, துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம்.

பைக் ஓட்டியப் பின்...
பைக் ஓட்டியப் பின், தவறாமல் தலையை சீவ வேண்டும் மற்றும் முகத்தை 3-4 முறை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications