Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
முகப்பருவால் வந்த வடு அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...

முகப்பரு வந்தால், முதலில் ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்து பின் அதில் கை வைத்தால் நல்லது. அப்படி நீக்கும் போது அதில் இருந்து வெளிவரும் வெள்ளை நிற திரவத்திற்குப் பிறகு இரத்தம் வரும். அதை துடைத்து விட்டு அப்படியே விடாமல் ஏதாவது ஒரு பேஸ் க்ரீமை போட வேண்டும். இப்படி செய்யாவிட்டால் பரு வந்த இடத்தில் உள்ள துளையில் தூசிகள் போய் பெரிய பிரச்சினையாகிவிடும்.
பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் ஃபேஷியல் செய்து கொள்ளவே கூடாது. முகப்பரு வர முதல் காரணமே சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தான். ஏனென்றால் ஃபேஷியலின் போது அதிகமாக எண்ணெய் பசை உள்ள க்ரீம்களையே பயன்படுத்துவார்கள். இது அவர்களது சருமத்தை மேலும் சிக்கலாக்கும். வேண்டுமென்றால் இவர்கள் ப்ளீச் செய்து கொள்ளலாம். ப்ளீச் செய்யும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை தான் நீக்கப்படுகிறது. எனவே ப்ளீச் செய்து கொள்வது நல்லது.
சிலருக்கு முகத்தில் அதிக பருக்கள் வந்து கையை வைக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும். அப்படி இருப்பவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. ஏனென்றால் அழகுக் கலை நிபுணர்களை விட, தோல் மருத்துவருக்கே சருமத்தைப் பற்றியும், என்ன பிரச்சனையென்றும் நன்கு தெரியும்.
இவ்வாறெல்லாம் செஞ்சு பாருங்க, வடு வராமல் முகம் அழகோடும் பொலிவோடும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
