Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
கொளுத்தும் கோடையில் கூலா இருக்க டிப்ஸ்!

தலைக்கு குளிங்க
மத்த சீசன் காலங்களில் எப்படியோ கோடையில் கண்டிப்பாக தினசரி தலைக்கு குளிங்க அப்பொழுதுதான் கோடை வெயிலை சமாளிக்க முடியும். சூரிய ஒளி நேரடியாக தலைமீது நேரடியாக படுவதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு ஏறுகிறது. எனவே தலைக்கு குளிப்பதன் மூலம் உடம்பில் உள்ள சூடு குறையும் உடலும் குளிர்ச்சியாகும். கண்களும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
பாதங்களை ஊறவையுங்கள்
கோடை காலத்தில் தினசரி இருமுறை குளிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இருவேளை குளிக்க முடியாவிட்டாலும் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பாத்ரூமிற்குள் போய் பாதங்களை ஊறவையுங்கள். இதனால் உடம்பில் உள்ள உஷ்ணம் காது வழியாக வெளியேறுவதை கண் கூடாக காண்பீர்கள். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடம்பில் கழுத்தும் தோள்பகுதியும் சந்திக்கும் பாகத்தில் குளிர்ச்சி அதிகம் இருக்கும். அந்த இடத்தில் சில துளிகள் ஜில் தண்ணீரை சொட்டு விடுங்களேன் உடம்பின் மொத்த பகுதியும் கூல் ஆகிவிடுவதை உணர்வீர்கள். உங்களின் காது வழியே மொத்த உஷ்ணமும் வெளியேறுவதை கண்கூடாக காண்பீர்கள்.
களிமண் பேக்
கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை வெளியேற்றுவதில் களிமண்ணிற்கு முக்கிய பங்குண்டு. இது கோடைகால கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. கடைகளில் விற்கப்படும் முல்தானி மெட்டி எனப்படும் களிமண் வாங்கி அதை நன்கு குழைத்து முகம் மற்றும் சருமத்தில் வெயில் படும் இடங்களில் பேக் போடவும். காய்ந்த பின்னர் ஊறவைத்து கழுவ உடல் குளிர்ச்சியடையும் சருமம் பாதுகாக்கப்படும்.
பன்னீர் சந்தனம்
கோடை காலத்தில் ரசாயனங்கள் அடங்கிய சன்ஸ்கிரீன் லோசன் உபயோகிப்பதால் சருமத்தில் இருந்து வியர்வை வெளியேறுவது தடை பட்டு உடல் மேலும் உஷ்ணமடையும்கி. இதனை தவிர்க்க இயற்கை லோசன்களை உபயோகிக்கலாம். பன்னீரில் சந்தனம் கரைத்து அதை உடல் முழுவதும் பூசுங்கள். இதனால் உடல் குளுமையடைவதோடு சருமம் பொலிவு பெறும்.
குளிர்ச்சியான உணவுகள்
கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ணுங்கள். வெள்ளரி, தர்பூசணி போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்களையும், யோகர்டு, தண்ணீர் போன்றவைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உடலில் நீர்சத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் உடலும் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் அடைகிறது. இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் கோடை காலத்தில் நீங்களும் அழகு ராணிதான்.



Click it and Unblock the Notifications
