Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க
உங்க அக்குளில் வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க..
Body Care Tips In Tamil: பார்க்க அழகாக இருந்தால் மட்டும் போதாது, நல்ல மணத்துடனும் இருந்தால் தான், மற்றவர்கள் நம்முடன் பழகு விரும்புவார்கள். துர்நாற்றமிக்க உடலுடன் இருந்தால், யாரும் அருகில் கூட வரமாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடலில் வியர்வையினால் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கவும், மறைக்கவும் டியோடரண்ட்டுகள், பெர்ப்யூம்கள் மற்றும் ரோல்-ஆன்கள் என்று பல கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவை தற்காலிக தீர்வு தானே தவிர நிரந்தர தீர்வுகள் அல்ல.
அதுவும் கோடைக்காலத்தில் தான் இப்படியான வியர்வை துர்நாற்ற பிரச்சனையை அதிகம் சந்திக்க நேரிடும். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு இயற்கை தீர்வுகளை காண நினைக்கிறீர்களா? அப்படியானால் வியர்வையினால் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க உதவும் பல இயற்கை வழிகள் உள்ளன. இவற்றை ஒருவர் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் வியர்வை துர்நாற்ற பிரச்சனையைத் தடுக்கலாம்.

பொதுவாக நமது உடலில் சுரக்கும் வியர்வை எந்த மணத்தையும் கொண்டிருக்காது. ஆனால் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் போது, அது பாக்டீரியாக்களை வளரச் செய்து, அதன் விளைவாக உடல் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. இப்போது அக்குளில் வீசும் வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும் சில இயற்கை வழிகள் குறித்து காண்போம்.
1. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் பண்புகள் சருமத்தில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, அக்குளில் தடவ வேண்டும். இப்படி தினமும் தடவி வந்தால், சில நாட்களிலேயே ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இல்லாவிட்டால் ஆப்பிள் சீடர் வினிகரை டியோடரண்ட் போன்றும் பயன்படுத்தலாம். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சம அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தினமும் குளித்து முடித்த பின் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
2. எலுமிச்சை ஜூஸ்
ஆப்பிள் சீடர் வினிகரைப் போன்றே எலுமிச்சை சாற்றிலும் அசிட்டிக் பொருள் அதிகமாக உள்ளது. மேலும் இந்த எலுமிச்சை சாற்றினை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சருமத்தின் pH அளவைக் குறைத்து, பாக்டீரியாக்களை அழிக்கும். அதற்கு எலுமிச்சையை வெட்டி, அதை அக்குளில் நேரடியாக தேய்த்து விட வேண்டும். பின் அதை 1 நிமிடம் காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயல்முறையை தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால் இன்னும் ஈஸியாக இருக்கும்.
குறிப்பு: சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்கள் எலுமிச்சை சாற்றினை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, பின் பஞ்சுருண்டையில் நனைத்து அக்குளில் தடவலாம்.
3. லாவெண்டர் ஆயில்
லாவெண்டர் ஆயில் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் இது நறுமணமிக்கதும் கூட. இதில் உள்ள உட்பொருள் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை குறிவைத்து அழித்து, அக்குள் நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் 3 டீஸ்பூன் சோள மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 8-10 துளிகள் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையைக் கொண்டு தினமும் அக்குளை ஸ்க்ரப் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. டீ பை
டீயில் டானின்கள் எனப்படும் கலவை உள்ளன. இவை உடலில் வியர்வை உருவாவதைத் தடுக்கிறது மற்றும் இது பாக்டீரியாக்கள் குவிவதைத் தடுக்கிறது. அதோடு சருமத்தை ஈரப்பதமின்றியும் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதற்கு டீ பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குளிக்கும் நீருடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த நீரைக் கொண்டு தினமும் குளித்து வந்தால், வியர்ப்பது தடுக்கப்படுவதோடு, வியர்வை நாற்றமும் தடுக்கப்படும்.
5. ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் சருமத்துளைகளை சுருங்கச் செய்து, வியர்வை உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். மேலும் இது நல்ல நறுமணத்தைக் கொண்டிருப்பதால், புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு ரோஸ் வாட்டர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சம அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை டியோ போன்று குளித்து முடித்த பின் அக்குளில் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். இதனால் துர்நாற்றம் நீங்கி, உடலில் நல்ல நறுமணம் வீசத் தொடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











