Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
ஒளிரும் சருமமும், கவர்ச்சியான தோற்றமும் வேண்டுமா? இந்த காய்கறிகளில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
காய்கறிகள் ஆரோக்கியமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் சருமத்திற்கும் பல நன்மைகளை செய்கிறது. காய்கறிகளில் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன, அவை உங்கள் சரும செல்களை சரிசெய்து அவற்றை உள்ளே இருந்து ஆரோக்கியமானதாக மாற்றுகின்றன.
சில வகையான காய்கறிகளை சாப்பிடுவது உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு கவர்ச்சியான தோற்றத்தையும் கொடுக்கும். அது என்னென்ன காய்கறிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் உடல் எடையை குறைக்க மட்டுமே என்று நீங்கள் நினைத்திருந்தால்,அது தவறான நம்பிக்கையாகும். வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு சிறந்த நீரேற்றத்தை அளிக்கும், அதிகப்படியான சரும சுரப்பைக் கட்டுப்படுத்தும் மற்றும் மெலனின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை வெளிப்புற சேதங்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் அதே நேரத்தில் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகின்றன.
கீரை
கீரை உங்கள் சருமத்திற்கு நல்லது என்பதற்கான காரணம் அதிலுள்ள பீட்டா கரோட்டினாகும். பல ஆய்வுகள் பீட்டா கரோட்டின் கொண்ட உணவுகளை உண்பது சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். கீரையில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை செல் இறப்பைக் குறைக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இந்த பச்சை இலை காய்கறியில் உள்ள இரும்பு மற்றும் ஃபோலேட் உங்கள் சருமத்திற்கு சிறந்த இரத்த விநியோகத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை உங்களுக்கு வழங்குகிறது.
பாகற்காய்
பாகற்காயை வெறுப்பவராக நீங்கள் இருந்தால் அதனால் கிடைக்கும் பல நன்மைகளை நீங்கள் இழக்கிறீர்கள். பாகற்காய் ஒரு இரத்த சுத்திகரிப்பு காயாகும், இது உங்கள் உட்புற அமைப்பை சுத்தப்படுத்தி உங்கள் மேற்பரப்பு சருமத்தை பளபளப்பாக மாற்றும். இந்த ஸ்பைக் காய்கறியில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், முகப்பரு மற்றும் பிற கோளாறுகளை ஏற்படுத்தும் நோய்த்தொற்றை உண்டாக்கும் பாக்டீரியாக்களைத் தடுக்கும். இதிலுள்ள கரேலா தழும்புகளை குறைக்கவும், கண்களுக்கு பளபளப்பான முகத்தை தருவதாகவும் அறியப்படுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரோக்கியமான உணவு மட்டுமல்ல, கவர்ச்சியான தோற்றத்தை பெறவும் உதவுகிறது. இந்த வேர் காய்கறியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தை உட்புற மற்றும் வெளிப்புற சேதங்களிலிருந்து பாதுகாக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது உங்கள் சருமத்தில் கொலாஜன் உருவாவதை அதிகரித்து, இளமையான, இறுக்கமான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.
கேரட்
கேரட் அதன் அழகிய ஆரஞ்சு நிறத்தை பீட்டா கரோட்டின் மூலம் பெறுகிறது. பீட்டா கரோட்டின் நிறைந்த உணவை தினமும் உண்பது, சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளுடன் உங்கள் நிறத்தை மேம்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரட்டில் காணப்படும் கரோட்டினாய்டுகள் மெலனின் வளர்ச்சியைத் தடுக்கின்றன, மேலும் உங்கள் சருமத்தில் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை அதிகரிக்கின்றன. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் சரும திசுக்களை சரிசெய்து, ஒளிரும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
பீட்ரூட்
சிவப்பான கன்னங்கள் வேண்டுமா? ஆம் எனில் நீங்கள் நிச்சயம் பீட்ரூட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சிவப்பு நிற வேர் காய்கறியில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது சருமத்தில் உள்ள ஹைப்பர் பிக்மென்டேஷனை குணப்படுத்தும். இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இது தோல் வறட்சி மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும். தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம், முகத்தில் மென்மையான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டு வரலாம்.
பீன்ஸ்
பீன்ஸ் உங்கள் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நல்ல ஊட்டச்சத்துடன் நிறைந்துள்ளது. இந்த அற்புதமான காய்கறியில் உங்கள் உள் அமைப்பை சுத்தப்படுத்த ஏராளமான உணவு நார்ச்சத்து உள்ளது. பளபளப்பான சருமத்தை அடைவதற்கு இது ஒரு முக்கியமான வழியாகும். பீன்ஸில் மெக்னீசியம் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் போன்ற தாதுக்கள் உள்ளன, அவை இறுக்கமான முக சருமத்தை வழங்குகின்றன.



Click it and Unblock the Notifications

