Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
கர்ப்பக்கால ஸ்கின் பிரச்சனைகளை சமாளிக்க டிப்ஸ்...
கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு உயிரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல அது, பெண்கள் மறு ஜென்மத்துக்காகத் தயாராகும் ஒரு செயலும்தான். பெண்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று தாய்மை. மிகவும் உன்னதமாக பார்க்கப்படுகிற இந்த விஷயத்த்தினால் பெண்கள் தாய்மைப் பேறு அடைவதாலேயே ஒரு பெண் முழுமையடைகிறாள் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட இந்த கர்ப்ப காலத்தில் பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏராளமான மாற்றங்களை சந்திப்பார்கள். வாழ்க்கையில் புதுமையான அனுபவத்தை சந்திக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களும் உண்டு அதே சமயம் அதனை கையாளத் தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவர்.

அந்த சமயத்தில் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சருமப் பிரச்சனைகள் தோன்றிடும். அதற்கு சிகிச்சையளிக்கும் வகையில் பல்வேறு அழகுசாதன பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது இவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்துவதினால் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை வருமா? எந்த கெமிக்கலும் சேர்க்காத இயற்கையான பொருட்களை வைத்து கர்ப்பிணிப்பெண்களுக்கான சில அழகு குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
1. சருமத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது இந்த கற்றாழை ஜெல். இதிலிருக்கும் அற்புதமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவிடும். இது எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதனை எளிதாக வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் சருமப்பிரச்சனை இருக்கும் இடங்களில் இந்த ஜெல்லை எடுத்து தடவுகள். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம்.
2. பெண்கள், தங்கள் வயிறு, மார்பு உள்ளிட்ட சருமத்தில் தடவும் பொருள்களில் என்னென்ன கலந்துள்ளது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்து பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.
3. கர்ப்பிணிகளின் சருமம் மிகவும் சென்ஸிட்டிவ் என்பதால், அவர்கள் வேக்ஸ் செய்யக் கூடாது. செண்ட்டுகளையும் பயன்படுத்தக்கூடாது..
4. கர்ப்ப காலத்தில் முகப்பரு வெடிப்புகள், தழும்புகள், பெரிய அளவிலான முகப்பருக்கள் தோன்றுவது போன்றவை இயல்பானது. இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் பொழிவான சருமத்தை பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், எண்ணெய் இல்லாத க்ளென்சரைக் கொண்டு உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். வறட்சியான சருமம் கொண்டவர்கள் காமெடோஜெனிக் அல்லாத ஃபேஸ் வாஷ்களைத் தேர்ந்தெடுக்கவும்.
5. சருமத்தில் வெவ்வேறு நிற மாற்றங்கள் உண்டாகியிருந்தால் அதனை போக்க இதனை முயற்சிக்கலாம். வெள்ளரியை அதன் விதைகளை நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மைய அரைத்த அந்த விழுதுடன் பால் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
6. சருமத்தின் மீது கடுமையாக செயலற்றக்கூடிய சோப்புகளை பயன்படுத்துவது, தோலில் உள்ள எண்ணெய்யை அகற்றக்கூடும். எனவே மென்மையான சோப்புக்கள் அல்லது மாய்ஸ்சரைசிங் பாடி வாஷ்களை பயன்படுத்தலாம்.
7. சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க விட்டமின் இ என்கிற சத்து மிகவும் அவசியமாகும். உங்கள் உடலில் விட்டமின் இ குறைந்தால் கூட சருமத்தில் அதன் பாதிப்புகள் தெரியும். இச்சமயத்தில் சருமத்திற்கு மட்டும் என்னென்ன க்ரீம்கள்,ஜெல் அப்ளை செய்துவந்தால் மட்டும் சருமம் பொலிவடையாது. சருமத்திற்கு தேவையான சத்துக்களையும் நாம் கொடுக்க வேண்டும். அதனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் விட்டமின் இ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
8. பப்பாளி சருமத்திற்கு மிகவும் நல்லது. பப்பாளிப் பழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரண்டு டீஸ்ப்பூன் பப்பாளி பழக்கூழுடன் ஒரு டீஸ்ப்பூன் தேன் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடுங்கள். 15 நிமிடங்களில் நன்றாக காய்ந்ததும் கழுவிவிடலாம். வரண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமைந்திடும்.
9. நம்முடைய சருமம் வரண்டுவிடாமல் பாதுகாத்து வந்தாலே பல்வேறு தோல் நோய்களிலிருந்து தப்பிக்கலாம். சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க வேண்டுமானால் போதுமான அளவு தண்ணீர் சத்து அவசியம். அதனால் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், தண்ணீரைத் தவிர இயற்கையான பழச்சாறுகள்,சூப்,இளநீர்,போன்றவை குடிக்கலாம்.
10. சந்தனம் மிகவும் குளிர்ச்சியானது. இதனை சூடான நீரில் கலந்து கொள்ளலாம் அல்லது இரண்டு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் தோன்றும் நிறமாற்றங்களை போக்கிடும். அதே சமயம் முகத்தை எப்போதும் ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவிடும்.



Click it and Unblock the Notifications