Latest Updates
-
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம்
முடி உதிர்தல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
கற்றாழை மற்றும் ஆளிவிதை முடி மாஸ்க் என்பது முடியின் ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்துவதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். இந்த முடி மாஸ்கை நீங்கள் எவ்வாறு செய்யலாம்? அதனை எப்படி அப்ளை பண்ணனும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலைமுடி பற்றிய கவலைக்கு முடிவே இல்லை. பிரபலமான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது கூட பயனளிக்காது. இந்த வெயிலில் முடி கரடுமுரடாக உலர்ந்து போகிறது. மேலும் முடி உதிர்கிறது. நீங்கள் வீட்டு வைத்தியத்தை செய்து பார்த்தால் கொஞ்சமாவது பலன் கிடைக்கும்.

அப்படி, வீட்டு வைத்தியத்தில் முடி பராமரிப்புக்கு மிக முக்கியமானது கற்றாழை மற்றும் ஆளிவிதையாகும். இந்த இரண்டு இயற்கை பொருட்களுடன் வேறு சில பொருட்களை கலந்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க் முடி உதிர்தல், பொடுகு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். இந்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
கற்றாழை மற்றும் ஆளிவிதை முடி மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்,
ஆளிவிதை ஒரு தேக்கரண்டி
தண்ணீர் ஒரு கப்
கற்றாழை ஜெல் 2-3 தேக்கரண்டி
செய்முறை
1. முதலில் ஆளி விதைகளுடன் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதனை அடிக்கடி கிளறவும். ஜெல் போல் கெட்டியானதும் தீயை அணைக்கவும்.
2. பின்னர் அதை ஆற வைத்து, கற்றாழை ஜெல்லை நன்கு கலக்கவும். இந்த கலவையை சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊற்றவும்.
ஹேர் மாஸ்க் போடும் முறை
1. முதலில், உங்கள் தலைமுடியை ஈரப்படுத்தவும். அதன் பிறகு இந்த ஹேர் மாஸ்க்கை ஈரமான கூந்தலில் தடவவும்.
2. முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவவும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சில நிமிடங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
3. அதன் பிறகு, உங்கள் தலைமுடியை ஷவர் கேப் மூலம் மூடவும். அரை மணி நேரம் கழித்து, உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
4. நல்ல பளப்பளப்பான சில்க்கியான முடிவைப் பெற வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்...
கற்றாழையின்நன்மைகள்
கற்றாழை முடி பராமரிப்புக்கு ஒரு சிறந்த ஜெல். வைட்டமின்கள் ஏ, சி, ஈ நிறைந்துள்ள கற்றாழை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. அதனை ஈரப்பதமூட்டுகிறது. முடி வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது, முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. முடி உதிர்தல், பொடுகு, இரட்டை கிளை முடி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் கற்றாழை மூலம் நீங்கும்.
ஆளிவிதையின் நன்மைகள்
ஆளி விதையில் புரதம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த விதை உச்சந்தலை மற்றும் முடியை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி வேர்களை பலப்படுத்தி நன்கு வளர செய்கிறது. முடியை மென்மையாகவும் கருகருவெனவும் வைத்திருக்கும். கற்றாழையைப் போலவே, ஆளிவிதையும் முடி உதிர்தல், பொடுகு, முடி வெடிப்பு, பிளவு போன்றவற்றை குணப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications
