Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த 4 ராசிக்காரங்க 40 வயதுக்கு மேல் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். அவர்களின் ஆளுமையையும், எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் ராசி அதிபதியின் ஆசீர்வாதத்தாலும், அவர்களின் தனிப்பட்ட முயற்சியாலும் அதிர்ஷ்டசாலிகளாக மாறுவார்கள்.
சில ராசிக்காரர்கள் இதற்கு முற்றிலும் நேர்மாறாக அவர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து சவால்களையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிப்பார்கள், குறிப்பாக அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதி மிகவும் சிரமமானதாக இருக்கும். அவர்களின் கடின உழைப்பு இதனை மாற்றக்கூடும் என்றாலும், அவர்கள் அலட்சியமாக இருந்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் 40 வயதுக்கு மேல் அதிக துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக அறியப்படுகிறார்கள். அதேசமயம் அவர்கள் அதிக பொறாமை உணர்வு கொண்டவர்களாகவும் ரகசியமானவர்களாகவும் இருப்பதால் அவர்களே தங்களை எப்போதும் துரதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்கிறார்கள். அவர்களின் இந்த எதிர்மறை எண்ணம் பிரச்சினைகளை ஈர்க்கலாம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் பெரிய மாற்றங்கள் மற்றும் சவால்களுடன் தொடர்புடைய ஒரு கிரகமான புளூட்டோவால் ஆளப்படுகிறார்கள், இது அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்ற எண்ணத்தை அதிகரிக்கிறது. அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் வயது அதிகரிக்கும் போது மேலும் அதிகரிக்கிறது, இது அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் மகிழ்ச்சியற்றவர்களாக மாற்றுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஒழுக்கமானவர்கள், ஆனால் அவர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கக்கூடும். இந்த எச்சரிக்கை நல்ல வாய்ப்புகளை இழக்கவோ அல்லது அதிக சவால்களை எதிர்கொள்ளவோ வழிவகுக்கும்.
மகர ராசிக்காரர்கள் நீதி உணர்வு மற்றும் சிரமங்களை அளிக்கும் பெயர் பெற்ற சனிபகவானால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் எச்சரிக்கை உணர்வால் அவர்கள் இழந்த வாய்ப்புகளை நினைத்து பிற்காலத்தில் மிகவும் கவலைப்படுவார்கள். இது அவர்களின் வாழ்க்கையை நிம்மதியற்றதாக மாற்றும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அதீத கருணையும், கற்பனைத் திறனும் கொண்டவர்கள், ஆனால் அவர்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்களாகவும் இருக்கலாம். இந்த உணர்திறன் அவர்களை புத்திசாலித்தனமாக முடிவெடுப்பதற்குப் பதிலாக உணர்வுகளின் அடிப்படையில் தேர்வுகளைச் செய்ய வழிவகுக்கும், இது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
அவர்கள் நெப்டியூனால் ஆளப்படுகிறார்கள், இது குழப்பம் மற்றும் மாயைகளுடன் தொடர்புடையது, இது அவர்கள் துரதிர்ஷ்டவசமானவர்கள் என்ற எண்ணத்தை மேலும் அதிகரிக்கிறது, இதனால் அவர்கள் எதிர்காலத்தில் அதிக துன்பத்திற்கு ஆளாகலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அனைவரின் மீதும் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் மற்றவர்களை சார்ந்திருப்பவராகவும் இருக்கலாம். அவர்களின் மாற்றம் குறித்த பயமும், கடந்த காலத்தின் மீதான பற்றுதலும் அவர்களை முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கும், இதனால் அவர்கள் வாய்ப்புகளைத் தவறவிடுவதாகவும் நம்புகிறார்கள். இதனால் தங்களின் தவறான முடிவுகளை நினைத்து அவர்கள் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
