இந்த 5 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க பண்ணுன தப்பை ஒத்துக்க மாட்டாங்க... மன்னிப்பும் கேட்க மாட்டார்களாம்...

வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த தவறிலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதும், அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்கிறார்களா என்பதுதான் மிகவும் முக்கியமானது. அனைத்திற்கும் மேலே முக்கியமானது அந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது.

எந்த சூழ்நிலையிலும் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்காத சிலரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்கள் செய்த தவறுக்கான ஆயிரம் ஆதாரங்களை நீங்கள் காட்டினாலும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். அவர்களின் பிடிவாதம் எந்த சூழ்நிலையிலும் அவர்களை பின்வாங்கவோ, மன்னிப்பு கேட்கவோ அனுமதிக்காது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த மோசமான பிடிவாதத்திற்கு சொந்தக்காரராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Zodiac Signs Who Never Apologise For Their Mistakes in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் பிடிவாதத்திற்கும், தற்பெருமைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் செய்த தவறுக்கு எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும், அவர்கள் தங்களின் தவறை ஒப்புக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மன்னிப்பு கேட்பது அவர்களை பலவீனமாக உணர வைக்கும், எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவோ அல்லது பழியை மற்றவர்களின் மீது சுமத்தவோ வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இது ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குதை அவர்களுக்கு கடினமாக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் மன உறுதிக்கும், பிடிவாதத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் தவறை மறைக்க அதிக தற்காப்பு மற்றும் வாக்குவாதம் செய்யும் போக்கைக் கொண்டவர்களாக இருக்கலாம், இதனால் மன்னிப்பு கேட்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். ஒருவேளை அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் அது உண்மையானதாக இருக்காது. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை விட அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், இது அவர்களின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கம்பீரமும், தற்பெருமையும் கொண்டவர்கள், அதனால் அவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொள்வது என்பது மிகவும் கடினம். அவர்கள்தங்கள் பெருமையை இழப்பதையோ அல்லது தவறு செய்தவர்களாக தோன்றுவதையோ வெறுக்கிறார்கள், எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை மறுக்கிறார்கள் அல்லது அது தவறே அல்ல என்று வாதிடுகிறார்கள். இது மற்றவர்களுடன் ஆழமான, அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதை அவர்களுக்கு சவாலாக மாற்றும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் தீவிர ஆர்வத்திற்கும், உறுதியான நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்றவர்கள். மன்னிப்பு கேட்பதற்கு அவர்கள் மிகவும் தயங்குவார்கள், ஏனெனில் அது அவர்களை பலவீனமானவர்களாக மாற்றும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். தங்கள் தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது அவர்கள் ஆக்ரோஷமாகவோ அல்லது அவர்களை தாக்கவோமுயற்சி செய்யக்கூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தற்பெருமையும், அனைத்திலும் சரியாக இருக்க வேண்டுமென்ற பரிபூரணத்துவமும் கொண்டவர்கள், அதனால் அவர்கள் தவறு செய்யும்போது அதை ஒப்புக்கொள்வது மிக மிக கடினம். மன்னிப்பு கேட்பதையும், திருத்திக் கொள்வதையும் விட தங்கள் நற்பெயரைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கலாம். இது உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, April 11, 2025, 10:08 [IST]
Desktop Bottom Promotion