இந்த 4 ராசிக்காரர்களின் அழிவுக்கு அவர்களேதான் காரணமாக இருப்பார்களாம்... ரொம்ப மோசமானவர்களாம் இவங்க...!

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவமும், ஒரு ஆளுமையும் இருக்கும். சில ராசிக்காரர்கள் அனைவருக்கும் சிறந்த நண்பர்களாக இருக்கும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் அவர்களுக்கே மிகப்பெரிய எதிரிகளாக இருப்பார்கள். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் நல்லவர்களாகவும், நண்பர்களாகவும் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு மற்றவர்களை விட மோசமான எதிரியாக அவர்கள்தான் இருப்பார்கள்.

அவர்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு குணம் அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கும், மேலும் அவர்களை அழிவுப்பாதையை நோக்கி இழுத்துச் செல்லும். இதனால் அவர்கள் பேரழிவுகளை ஏற்படுத்துபவர்களாக மாறுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கே மிகப்பெரிய எதிரிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Zodiac Signs Who Are Their Own Dangerous Enemies

ரிஷபம்

பணம்தான் ரிஷப ராசிக்காரர்களை அவர்களுக்கே மிகப்பெரிய எதிரிகளாக மாற்றுகிறது. பொதுவாகப் பொறுப்புள்ளவர்களாக இருந்தாலும், ஆடம்பர வாழ்க்கை மீதான அவர்களின் மோகம் அவர்களை வரம்பின்றி செலவழிக்கத் தூண்டுகிறது. ரிஷப ராசிக்காரர்களிடம் ஒரு மோசமான சுயநலப் போக்கு உள்ளது, அவர்கள் மிகவும் ஆடம்பரமான, ஸ்டைலான மற்றும் சொகுசான பொருட்களை வைத்திருக்க விரும்புகிறார்கள்.

ஆனால் அதற்காக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். தங்களின் ஆடம்பரத் தேவைகளுக்காக அவர்கள் கடினமாக உழைப்பார்கள் அல்லது சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இது அவர்களுக்கு நிம்மதியற்ற வாழ்க்கை அல்லது சிறை தண்டனையை வழங்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பின்மை காரணமாக அவர்களின் மோசமான எதிரியாக மாறுகிறார்கள். அவர்கள் எப்போதும் அதீதமாக சிந்திக்க முனைகிறார்கள், சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களையோ மோசமாக சிந்திக்கத் தூண்டும், அவர்களின் கற்பனைத்திறன் எல்லையற்றது. அது எதிர்மறை சிந்தனைகளை அதிகரிக்கும்.

இது அவர்களின் உறவுகளில் குறிப்பாக உறவு விஷயங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்கள் அனைவரும் தங்களை ஏமாற்றுவதாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையின் செயல்கள் ஒவ்வொன்றையும் சந்தேகிக்கிறார்கள், இது அவர்களின் உறவுகளில் பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தங்கள் பரிபூரணவாத குணத்தால் தங்களுக்குத் தாங்களே மிகப்பெரிய எதிரிகளாக மாறுகிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும்அது சரியாக இருக்க வேண்டும் என்ற இந்த அதீதப் பற்று, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். தங்களுக்குத் தாங்களே உயர்ந்த இலட்சியங்களை அவர்கள் நிர்ணயித்துக் கொள்வார்கள், அடைய முடியாத அளவுக்கு மிக உயர்ந்த இலக்குகளை அடையத் தவறும்போது, ​​அது அவர்களை மனசோர்விலும், துயரத்திலும் தள்ளுகிறது.

அவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வே இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. கன்னி ராசிக்காரர்கள் ஒரு இலக்கை அடைந்து விட்டால் அதை நினைத்து மகிழ்ச்சி அடையாமல், உடனடியாக அடுத்த இலக்கை நோக்கி ஓடுவார்கள். இது அவர்களை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் கோபம்தான் அவர்களை அவர்களுக்கே மோசமான எதிரிகளாக மாற்றுகிறது. விருச்சிக ராசிக்காரர்களால் யாரையும், எதையும் எளிதில் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. யாராவது தங்களை அவமதித்துவிட்டதாக அவர்கள் உணரும்போது, ​​அது உண்மையாக இல்லாத பட்சத்திலும் அல்லது தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒன்று மற்றவர்களுக்குக் கிடைத்துவிட்டது என்று அவர்கள் நினைக்கும்போது, ​​அவர்களின் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் தீர்க்கமாக இருக்கும், அதுதான் பழிவாங்குதல்.

விருச்சிக ராசிக்காரர்களின் இந்த பழிவாங்கும் செயல்கள் அவர்களுக்கு நல்ல பெயரைத் தேடித்தருவதில்லை.அது அவர்களின் மோசமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையில், அது அவர்களை மிகவும் ஆபத்தானவர்களாகவும், மற்றவர்களின் வெறுப்புக்குரியவர்களாகவும் மாற்றுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, December 15, 2025, 9:51 [IST]
Desktop Bottom Promotion