Latest Updates
-
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசிக்காரங்க விளையாட்டில் சாதிக்க பிறந்தவர்களாம்... வெற்றி இவங்க இரத்தத்திலேயே இருக்காம்...!
ஒரு வெற்றிகரமான விளையாட்டு வீரராக இருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் விளையாட்டில் வெற்றிகரமானவராக இருப்பதற்கு உடல் வலிமை, மன உறுதி மற்றும் கடுமையான அர்ப்பணிப்பு தேவை. அனைவரிடமும் இந்த குணங்கள் இருக்காது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களிடம் இந்த குணங்கள் இயற்கையாகவே இருக்கும்.
இந்த குணங்கள் அவர்களை அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக மாற்றும். குறிப்பாக அவர்கள் விளையாட்டு துறையில் நுழைந்தால் அவர்கள் பெரிய சாதனையாளர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனையாளர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் நெருப்பு ராசியான மேஷம், அதன் போட்டித் தன்மைக்கும் அளவில்லாத ஆற்றலுக்கும் பெயர் பெற்றது. மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே சவால்களை எதிர்கொண்டு தங்கள் இலக்குகளை அடையும் இலட்சிய வெறி உள்ளவர்கள்.
இந்த குணங்கள் அவர்களை விரைவான முடிவெடுக்கும் திறன், உடல் சகிப்புத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் செயல்படக்கூடிய சமயோசித புத்தி தேவைப்படும் விளையாட்டுகளுக்கு மிகவும் பொருத்தமானவர்களாக மாற்றுகின்றன. மேஷ ராசிக்காரர்கள் தனிப்பட்ட பங்கேற்பு தேவைப்படும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறார்கள், அதில் அவர்களின் உறுதியும் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பமும் வலுவாக வெளிப்படும்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் நெருப்பு ராசியான சிம்ம ராசிக்காரர்கள், வசீகரத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே சிறப்பான விளையாட்டுத் திறனையும், அணிகளை ஊக்குவிக்கும் மற்றும் வழிநடத்தும் திறனையும் கொண்டுள்ளனர்.
அவர்களின் போட்டி மனப்பான்மை, கவனத்தை ஈர்க்கும் தீவிர விருப்பம், குழுப்பணி, செயல்திறன் மற்றும் பொதுமக்களின் கவனத்தை உள்ளடக்கிய விளையாட்டுகளில் அவர்களை சிறந்தவர்களாக மாற்றுகிறது. அவர்களின் ஆற்றலும் நேர்மறையான அணுகுமுறையும் மைதானத்திள் அவர்களின் வெற்றிக்கு பங்களிக்கின்றன.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள், சாகசத்தை விரும்புபவர்களாகவும், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றி மீது வலுவான விருப்பத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தனுசு ராசிக்காரர்கள் நீண்ட தூர ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல்அதிக உடல் உழைப்புகளை உள்ளடக்கிய விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
அவர்களின் எல்லையற்ற உற்சாகமும், ரிஸ்க் எடுப்பதில் உள்ள விருப்பமும், சகிப்புத்தன்மை மற்றும் மன உறுதி தேவைப்படும் விளையாட்டுகளில் தங்கள் எல்லைகளைத் தாண்டி குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்ய உதவுகின்றன.
மிதுனம்
புதன் ஆதிக்கம் செலுத்தும் மிதுன ராசிகாரர்கள், அவர்களின் சுறுசுறுப்பு மற்றும் பல்துறை திறனுக்கு பெயர் பெற்றவர்கள். மிதுன ராசிக்காரர்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் கொடுக்கும் விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள் மற்றும் புதிய சவால்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்களின் விரைவான புத்திசாலித்தனம், திட்டமிடல் மற்றும் சிறப்பான முடிவெடுக்கும் திறன் தேவைப்படும் விளையாட்டுகளில் அவர்கள் சிறப்பாக செயல்படுவாட்கள். ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்புக் கலைகள் அல்லது ஃபென்சிங் போன்ற துல்லியம் மற்றும் நுட்பத்தை உள்ளடக்கிய விளையாட்டுகளில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

