Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த 4 ராசிக்காரங்க தெரியாம கூட யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாதாம்... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவாங்க...!
மனிதர்களின் மிகப்பெரிய எதிரி எதுவென்றால் அது அவர்கள் வாங்கும் கடன்தான். ஏனெனில் கடன் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. ஆனால் சில அசாதாரண சந்தர்ப்பங்களில் கடன் வாங்காமல் வாழவும் முடியாது. கடன் கொடுத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதா காரியமல்ல.
வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பது எவ்வளவு கடினமோ அதேபோல சிலருக்கு கொடுத்தக் கடனை திரும்பக் கேட்பதும் கடினமாகும். ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை எந்த சூழ்நிலையிலும் தவிர்க்க வேண்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு கடனாக கொடுக்கப்பட்ட பணம் ஏதோ ஒரு காரணத்தால் திரும்ப கிடைக்காமல், அவர்கள் பெரிய பணப்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கக் கூடாது அல்லது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள். இதனால் அவர்கள் இயல்பிலேயே அனைத்திற்கும் தயங்குபவர்களாக இருப்பார்கள். தயக்கம் காரணமாக இவர்கள் கடனை திரும்ப பெற முடியாமல் தவிக்கின்றனர்.
அவர்கள் கடனாகப் பெற்ற பணத்தைத் திரும்ப கேட்பது பற்றி நிறைய யோசிக்கிறார்கள், மேலும் தங்கள் உறவைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்காமல் தவிர்க்கிறார்கள். கடனை திரும்ப வாங்குவதில் அவர்களுக்கு இருக்கும் தயக்கம் அவர்களின் நிதி நிலையை கடுமையாக பாதிக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள், இப்படிப்பட்டவர்கள் ஒருவருக்கு கடன் கொடுக்க மறுக்க முடியாது. இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுத்த பிறகும் அதை நினைத்து மனம் வருந்துவார்கள். பல சமயங்களில் மக்கள் தங்களிடம் வாங்கிய பணத்தைத் திரும்பக் கேட்கத் தயங்குகிறார்கள்.
பணத்தைக் கேட்டு அவர்களை சிரமப்படுத்தக்கூடாது கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒருமுறை இவர்கள் பணம் கேட்டு அது கிடைக்கவில்லை என்றால், இவர்கள் ஏமாற்றமடைந்து பணத்தைத் திரும்பக் கேட்பதை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால், நிச்சயமாக அதில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து விஷயத்திலும் சமநிலையைக் கடைபிடிக்க விரும்புகிறார்கள். ஆனால், உறவுகள் என்று வரும்போது இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடன் கொடுத்த பணம் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் பணம் எப்போதும் திரும்ப கிடைக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிக்காரர்களைப் போல தயக்கம் எதுவும் கிடையாது. தனுசு ராசிக்காரர்களுக்கு கடன் கொடுத்த பணம் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் உண்டு. இவர்கள் திரும்ப திரும்ப கேட்டும் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால், அது வாக்குவாதம் சில சமயங்களில் வன்முறைக்குக் கூட வழிவகுக்கும்.
அவர்கள் யாருடனும் தகராறு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், மக்களுடனான அவர்களின் உறவுகளும் பாதிக்கப்படுகின்றன. இந்த ராசிக்காரர்கள் வியாழன் அன்று யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. இந்த நாளில் கடன் கொடுத்தால், பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் அதிகரிக்கும்.
( மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
