Latest Updates
-
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
உங்க பிறந்த தேதி படி மகாபாரதத்தில் உள்ள எவருடைய குணம் உங்களுக்குள் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
மகாபாரதம் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றாகும். மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் வாய்ந்ததாகவும், கம்பீரமானதாகவும் இருக்கும். சொல்லப்போனால்,மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயங்களும் நமக்குள் இருக்கும்.
கர்ணன், பீஷமர், அர்ஜுனன் போன்ற வீரமான கதாபாத்திரம் முதல் துரியோதனன், சகுனி போன்ற வில்லன் பாத்திரங்கள் வரை எண்ணற்ற கதாபாத்திரங்கள் மகாபாரதத்தில் உள்ளன. இதில் எந்த கதாபாத்திரத்தின் ஆளுமை உங்களுக்குள் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அதை தெரிந்து கொள்ள உங்களின் பிறந்த தேதி உதவியாக இருக்கும். இந்த பதிவில் உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் மகாபாரதத்தின் எந்த கதாபாத்திரத்தின் ஆளுமை உங்களுக்குள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதத்திலும் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 1 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரம் ஆளுமை இவர்களுடன் ஒத்துப் போகிறது, ஏனெனில் அவரும் சூரியனின் மகன் என்று அழைக்கப்பட்டார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கர்ணன் போல வீரமும், மன உறுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அனைத்து மாதத்திலும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 2 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் உணர்ச்சிகள், மன உணர்வுகள் மற்றும் நீரைக் குறிக்கும் சந்திர கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். மகாபாரதத்தில் வரும் கங்கையின் புதல்வனான 'பீஷ்மர்' கதாபாத்திரம் இந்த விதிஎண்ணுடன் ஒத்துப் போகிறது. அவர் பூமியின் மிகவும் புனிதமான நதியுடன் தொடர்புடையவர். அதேசமயம் அவர் கடல் போல ஆழமான அமைதியும், பேராற்றலும் கொண்டவராவார்.
அனைத்து மாதத்திலும் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 3 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அறிவு மற்றும் ஞானத்தைக் குறிக்கும் வியாழன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரும், பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவுமான துரோணாச்சாரியார் இந்த எண்ணுடன் தொடர்புடையவர்.
அனைத்து மாதத்திலும் 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த மாதத்தில் பிறந்தவர்களின் விதி எண் 4 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மாயை, இருள் ஆகியவற்றை குறிக்கும் ராகு கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். இது உங்களை ஆடம்பரமாகவும், அகங்காரத்துடனும் வாழத் தூண்டுகிறது. மகாபாரதப் போருக்குக் காரணமாக இருந்த கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன் இந்த எண்ணுடன் தொடர்புடையவராக இருக்கிறார்.
அனைத்து மாதத்திலும் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5 ஆகும். இந்த எண்ணைக் கொண்ட நபர்கள் நகைச்சுவை, அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நல்ல அறிவாற்றலைக் குறிக்கும் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். மகாபாரதத்தின் மிக மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று இந்த பிறவி எண்ணுடன் ஒத்துப்போகிறது, அது வெறு யாருமல்ல பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அவர் அர்ஜுனனுக்கு ஞானத்தை அளித்து, அநீதிக்கு எதிராகப் போராட அவருக்கு வழிகாட்டினார்.
அனைத்து மாதத்திலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 6 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். இந்த கிரகம் அழகான அதே சமயம் வலிமையான பெண் ஆற்றலைக் குறிக்கிறது. மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான திரௌபதி, இந்த பிறவி எண்ணுடன் தொடர்புடையவர். அவர் பாண்டவர்களின் மனைவியாக நெருப்பிலிருந்து பிறந்தவர்.
அனைத்து மாதத்திலும் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 7 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் நீதி மற்றும் ஆன்மீகத்தைக் குறிக்கும் கேது கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். எமதர்மரின் தர்ம புதல்வரான யுதிஷ்டிரர் இந்த பிறவி எண்ணுடன் பொருந்துகிறார், ஏனெனில் அவர் எப்போதும் நீதியின் பாதையையே பின்பற்றினார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தர்மத்தைக் கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள்.
அனைத்து மாதத்திலும் 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 8 ஆகும், இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஒழுக்கம், நீதி மற்றும் கர்மாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சனி கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரும், பெரும் ஞானியுமான விதுரர், இந்த பிறவி எண்ணுடன் ஒத்துப் போகிறார்; அவர் எப்போதும் கர்மா மற்றும் நீதியைக் கடைபிடித்தார்.
அனைத்து மாதத்திலும் 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 9 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் வலிமை, சக்தி மற்றும் தைரியத்தைக் குறிக்கும் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். மகாபாரதத்தில் அனைவரையும் விட பலசாலியான பீமன் கதாபாத்திரம் இந்த பிறவி எண்ணுடன் ஒத்துப்போகிறது, ஏனென்றால் அவர் வலிமை, தைரியம் மற்றும் அச்சமின்மைக்காக மிகவும் பிரபலமானவராவார். அதர்மம் புரிந்த 100 கௌரவர்களையும் வதம் செய்தவர் பீமன்தான்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
