Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2025 பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 22 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில் இருந்த தடைகள் இருக்கும். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து உதவியும், ஆதரவும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் மேற்கொள்ளும் பயணம் எதிர்பார்த்ததை விட அதிக பலனளிக்கும் மற்றும் லாபகரமானதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் காரணமாக, உங்கள் வேலையில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், நிலுவையில் உள்ள பணிகளும் விரைவாக முடிவடையும். அரசியலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இந்த வாரத்தில் உங்களின் புகழ் அதிகரிக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகள் லாபத்தைத் தரும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படலாம். காதல் உறவுகள் ஆழமாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் பொறுமையாகவும், பணிவாகவும் நடந்து கொண்டால் பல நல்ல பலன்களைப் பெறலாம். நீங்கள் ஒரு வேலை செய்பவராக இருந்தால், பணியிடத்தில் எதிரிகளுடன் மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பரப் பொருட்களுக்கு பணம் செலவழிப்பீர்கள். சந்தையில் சிக்கித் தவிக்கும் பணம் எதிர்பாராத விதமாக கைக்கு கிடைக்கும். நீண்டகால குடும்பப் பிரச்சினை தீர்க்கப்படலாம்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தை விட பிற்பகுதியில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வாரத்தில், உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருந்து உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்யலாம். இந்த வாரம் நிதி சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கலாம்.
வாரத்தின் நடுப்பகுதியில் திடீரென பெரிய செலவுகள் ஏற்படுவதால் உங்களுக்கு நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டியிருக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலை அல்லது இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சோம்பேறித்தனமும், தற்பெருமையும் நஷ்டத்தை உண்டாக்கும். எந்த வேலையையும் ஒத்தி வைக்காதீர்கள். மேலும் பணிவாக பேசினால் வேலையை முடிக்கலாம். இந்த வாரம் நீங்கள் பேசுவதை விட மக்கள் சொல்வதைக் கேட்பது நல்லது. வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் திட்டமிட்ட வேலையில் திடீரென்று சில தடைகளை சந்திக்க நேரிடும்.
தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் மிகவும் சவாலானதாக இருக்கலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் சற்று கவனமாக பண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பீர்கள். இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் எந்த வேலையிலும் குறுக்குவழிகளை தேர்ந்தெடுப்பதையோ அல்லது விதிகளை மீறுவதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வாரத்தின் தொடக்கத்தில், ஒரு குறிப்பிட்ட பணியை சரியான நேரத்தில் முடிப்பது குறித்து நீங்கள் கவலைப்படுவீர்கள்.
இந்த வாரம், வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைப் பெற மாட்டார்கள். வாரத்தின் பிற்பகுதியில், பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப ஊக்கமோ பாராட்டுகளோ கிடைக்காததால் நீங்கள் கொஞ்சம் மகிழ்ச்சியற்றவராக இருக்கலாம். இந்த வாரம் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். பயணத்தின் போது உங்கள் உடல்நலம் மற்றும் உடமைகளை சிறப்பு கவனத்துடன் வைத்திருக்க வேண்டும். காதல் உறவுகளில் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











