Latest Updates
-
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Venus Transit In Scorpio On 13 October 2024: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியையும், 13 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார் மற்றும் அந்நபரின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 13 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் நவம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார்.

செவ்வாயின் ராசிக்குள் சுக்கிரன் நுழைவதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறவுள்ளார்கள். அதுவும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியால் 4 ஆவது வீட்டிற்குள் நுழையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் ரீதியாக, பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 2 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியால் 3 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
வெளிநட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பல வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிதி நிலை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications