Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
நவம்பரில் 3 முறை நிலையை மாற்றும் சுக்கிரன்: இந்த ராசிக்காரர்களுக்கு 3 மடங்கு அதிர்ஷ்டம் தேடி வரும்..
Venus Transit 3 Times In November 2025: நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும் கருதப்படுகிறார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால், வாழ்வில் பலவிதமான பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் காதல் வாழ்க்கையிலும் கொடுமையாக இருக்கும்.

இந்த சுக்கிரன் நவம்பர் மாதத்தில் 3 முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதில் நவம்பர் 07 ஆம் தேதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். அதன் பின் நவம்பர் 18 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இருந்து விசாக நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். அதன் பின் நவம்பர் 29 ஆம் தேதி விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுசம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார்.
இப்படி ஒரே மாதத்தில் சுக்கிரன் 3 முறை நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது சுக்கிரனின் இந்த பெயர்ச்சிகளால் 12 ராசிக்காரர்களுக்கும் நவம்பர் மாதம் தொழில் மற்றும் நிதி ரீதியாகவும், உறவுகள் ரீதியாகவும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சிகளால் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கை மேம்படும். புதிய நட்புகள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் பெரிய அளவில் லாபத்தைக் காண்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சிகளால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் நிதி முதலீடுகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். புகழும் வெற்றியும் தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை கொள்ள வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சிகளால் இம்மாதம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக ஒவ்வொரு திட்டங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல வேலைகளில் கவனம் செலுத்துவதோடு, புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும். மேலும் தொழில் ரீதியா பல நல்ல செய்திகளையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் வேலையில் அழுத்தமும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும். உயர் அதிகாரிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். மன அழுத்தம் குறையும். ஆனால் பணத்தை செலவழிக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சிகளால் வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். காதலித்து வந்தால், அந்த காதல் கைக்கூடும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சிகளால் முதலீடுகள் மற்றும் வணிகத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் வேலையில் நல்ல கவனத்தை செலுத்தி, வளர்ச்சியைக் காணலாம். காதல் வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சிகளால் வாழ்க்கையில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். இதனால் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இம்மாதத்தில் புதிய திட்டங்களை திட்டமிட்டால் நல்ல வெற்றியைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் உறவுகள் வலுவடையும். புதிய நட்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வேலையில் வெற்றிகள் குவியும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். மேலும் வாழ்வில் பல முக்கியமான விஷயங்கள் நடக்கும். நிதி ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் பெரும் வெற்றிகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். இம்மாதத்தில் புதிய வேலையை தொடங்கினால் நல்ல வெற்றியைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











