Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
சனிபகவானின் ராசிக்கு சுக்கிரன் செல்வது 2026-ல் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2026-ன் தொடக்கத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற போகின்றன. ஜோதிடரீதியாக இந்த கிரக மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுக்கிரன் சனிபகவான் ஆளும் ராசியான மகர ராசியில் நுழைவார். ஜோதிடத்தில் சுக்கிர ன் மிகவும் முக்கியமான கிரகமாவார். எனவே சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. ஜனவரி 13, 2026 அன்று அதிகாலை 4:02 மணிக்கு, சுக்கிரன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகி, பிப்ரவரி 6 வரை அதே ராசியில் நீடிக்கப் போகிறார்.

இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட யோகத்தை தரப்போகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது. இந்த பதிவில் 2026-ல் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகும் 3 ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு, சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவது சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த பெயர்ச்சி அவர்களின் அவர்களின் 10வது வீட்டில் நடைபெறப் போகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் அவர்களின் செயல்திறன் மற்றும் நம்பிக்கை இரண்டும் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
இந்த சுக்கிர பெயர்ச்சி வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நிலம், சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் பொன்னான வாய்ப்புகளைத் தரும், மேலும் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.
துலாம்
சுக்கிர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள். இந்த கிரக மாற்றம் அவர்களின் 4வது வீட்டில் நடைபெறப்போகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை திறமையாக சமாளிக்க முடியும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும், குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். இந்த யோகத்தால் அவர்களின் வாழ்க்கையில் ஆடம்பரம் அதிகரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவர்களின் முடிக்கப்படாத அனைத்து பணிகளும் இப்போது வெற்றிகரமாக நிறைவடையும். வியாபாரிகள் வெவ்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த குருபெயர்ச்சியால் அவர்கள் எந்த உடல்நலக் பிரச்சினைகளையும் சந்திக்க மாட்டார்கள். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு எதிர்பார்க்காத வெற்றியைத் தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி அவர்களின் 1வது வீட்டில் நடைபெறப்போகிறது, இது அவர்களுக்கு அமைதியையும், செழிப்பையும் தரப்போகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் அவர்கள் தங்களுக்கான புதிய வேலையைக் கண்டுபிடிக்க முடியும், அதேபோல் அவர்களின் தற்போதைய வேலையை மாற்றவும் முடியும். வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரிகளின் உதவியையும், ஆதரவையும் பெறலாம். மேலும் அவர்களின் துறையில், பல சாதனைகளை செய்ய முடியும்.
பொருளாதாரரீதியாக அவர்கள் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். அவசர முடிவுகளை எடுக்காமல் கவனமாக இருங்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்க முடியும். அவர்களின் வேலையைக் கெடுக்க எதிரிகள் முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களின் கை ஓங்கி இருக்கும். இந்த சுக்கிர பெயர்ச்சி அவர்களின் பலத்தை அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
