Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாக மாறப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
தை பௌர்ணமியில் உதயமாகும் சுக்கிரன்: இன்று முதல் அடுத்த 9 மாதம் இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனையே வராது!
Venus Rise On Thai Pournami 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் 1 மாதம் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்வார்.
இப்படிப்பட்ட சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் காணப்படும். இந்த சுக்கிரன் இதுவரை அஸ்தமன நிலையில் இருந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 01 ஆம் தேதி சுக்கிரன் உதயமாகவுள்ளார். இந்நாளில் தான் தை பௌர்ணமியும் வருகிறது. இப்படி தை பௌர்ணமி நாளில் சுக்கிரன் உதயமாவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், வேலையில் நல்ல வெற்றியையும் பெறவுள்ளனர்.
குறிப்பாக அடுத்த 9 மாதம் சுக்கிரன் இந்நிலையிலேயே இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு தீபாவளி வரை அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது தை பௌர்ணமியில் உதயமாகும் சுக்கிரனால் இன்று முதல் அடுத்த 9 மாதம் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் வந்து குவியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை சொத்துக்களால் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட கால பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, உறவுகள் மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும். கையில் பணம் குவியும். சிறு முயற்சியிலும் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் நீண்ட காலமாக திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் உறவுகள் வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். இதுவரை சந்தித்து வந்த பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
