Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Venus Nakshatra Transit On 28 November 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது தவிர, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படிப்பட்ட சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு நுழைந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்.

ஜோதிடத்தின் படி சுக்கிரனும் செவ்வாயும் நட்புறவு கொண்டவர்கள். எனவே இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் மகத்தான செல்வத்தையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். கலை, ஊடகம், ஃபேஷன் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்று முதல் மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய ஆசைகள் மனதில் எழும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சுக்கிரனின் அருளால் சொத்துக்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் சுக்கிரனின் அருளால் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
