Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்: நவம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Venus Make Malavya Rajyog On November 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள், அம்சங்கள் மற்றும் சேர்க்கைகளால் பல ராஜயோகங்கள் அவ்வப்போது உருவாகி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான ராஜயோகங்கள் ஒருவரது ஜாதகத்தில் உருவாகும் போது, அது அந்நபரின் பொருள் இன்பங்களையும், செல்வத்தையும் அதிகரிக்கும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் நவம்பர் மாதத்தில் ஒரு மங்களகரமான ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அது தான் மாளவ்ய ராஜயோகம். இந்த ராஜயோகமானது சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைவதால் உருவாகிறது. அதுவும் இது நவம்பர் மாத தொடக்கத்தில் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் செல்வம், மகிழ்ச்சி, வசீகரம் மற்றும் வாழ்வில் பல அம்சங்களில் முன்னேற்றம் ஆகியவற்றை கொண்டு வருகிறது.

நவம்பர் தொடக்கத்தில் உருவாகும் இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது நவம்பர் மாதத்தில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பங்கு சந்தையில் இருந்து எதிர்பாராத லாபங்களைப் பெறுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதுமண தம்பதிகள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வோ அல்லது புதிய பொறுப்புக்களோ வழங்கப்படலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல லாபத்தைத்தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அன்புக்குரியவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
