Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
84 ஆண்டுகளுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: மிதுனம் உள்ளிட்ட 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது
Dwidwadash Yog On 01 August 2025: வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார். இப்படிப்பட்ட சுக்கிரன் அசுரர்களின் குரு ஆவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட.
சுக்கிரனின் நிலை மட்டுமின்றி, அம்சமும் சில சமயங்களில் சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில், குறிப்பாக நிதி நிலையில், காதல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன்.

இந்த மிதுன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். அதோடு குரு பகவானுடன், சுக்கிரனும் ஒன்றிணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் தேதி சுக்கிரனால் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகிறது. அது தான் த்வி துவாதச யோகம்.
இந்த யோகத்தை சுக்கிரன் யுரேனஸ் கிரகத்துடன் 30 டிகிரி கோணத்தில் உருவாக்குகிறார். இந்த ராஜயோகமானது பண வரவை அதிகரிக்கக்கூடியது. இந்த ராஜயோகம் கிட்டத்தட்ட 84 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. ஏனெனில் யுரேனஸ் ஒரு ராசியில் சுமார் 7 ஆண்டுகள் வரை இருக்கும். இதனால் ஒரு சுழற்சியை முடிக்க 84 ஆண்டுகள் ஆகும்.
இந்த த்வி துவாதச ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் மிகவும் சிறப்பான நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது த்வி துவாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
த்வி துவாதச ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முக்கியமாக நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் யுரேனஸால் உருவாகும் த்வி துவாதச ராஜயோகத்தால் வாழ்க்கையின் பல பகுதிகளில் சாதகமான விளைவுகளைக் காணக்கூடும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் யுரேனஸால் உருவாகும் த்வி துவாதச ராஜயோகத்தால் வெற்றிகள் குவியும். நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையுடனான பிணைப்பு அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
