Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சுக்கிரனால் உருவாகும் அர்த்தகேந்திர யோகம்: ஆகஸ்ட் 14-ல் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Venus Make Ardhakendra Yog On 14 August 2025: வேத ஜோதிடத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளால் அவ்வப்போது யோகங்களையும் உருவாக்குவார். அந்த வகையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுக்கிரன் யுரேனஸ் உடன் இணைந்து யோகத்தை உருவாக்கவுள்ளார். அதுவும் இவ்விரு கிரகங்களும் 45 டிகிரியில் இருந்து அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தினால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது யுரேனஸ் மற்றும் சுக்கிரனால் உருவாகும் அர்த்தகேந்திர யோகத்தால் ஆகஸ்ட் 14-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அர்த்த கேந்திர யோகத்தால் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யாத்திரைகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் கனவு நனவாகும். ஆனால் இக்காலத்தில் எந்த ஒரு முடிவையும் யோசிக்காமல் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர யோகமானது சிறப்பான பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர யோகமானது வாழ்க்கையில் பல பகுதிகளில் நன்மைகளை வழங்கப் போகிறது. அதுவும் குருவுடன் சுக்கிரன் இணைந்திருப்பதால், இந்த ராசிக்காரர்கள் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதற்கு ஒரு முடிவு கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
