Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
செப்டம்பரில் 15 நாட்களில் நிகழும் 2 கிரகணங்கள்: இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
Two Eclipses Occur In September 2025: இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, இம்மாதத்தில் 2 கிரகணங்கள் நிகழ்கின்றன. அதில் இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்ம்பர் 07 ஆம் தேதி நிகழ்ந்தது.
இந்த சந்திர கிரகணம் சற்று சிறப்பானது. ஏனென்றால் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் நன்கு தெரிந்தது. அதோடு இந்த சந்திர கிரகணம் இரத்த நிலவு என்றும் அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 15 நாட்கள் கழித்து இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

இதில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதே சமயம் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் படி, இப்படி ஒரே மாதத்தில் 2 கிரகணங்கள் அடுத்தடுத்து நிகழ்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சிலருக்கு சிறப்பாக இருக்கும் அதே வேளையில், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளையும், பெரிய இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். இப்போது செப்டம்பர் மாதத்தில் 2 முறை நிகழும் கிரகணங்களால் எந்த ராசிக்காரர்கள் பிரச்சனையில் சிக்கி தவிக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
செப்டம்பர் மாதத்தில் 2 முறை நிகழும் கிரகங்களால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். தாயாருடன் நிறைய சண்டை வரும். இம்மாதத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த பேச்சே பல சிக்கலில் சிக்க வைக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்களின் பணம் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் எதையும் கவனமாக யோசித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
செப்டம்பர் மாதத்தில் நிகழும் 2 கிரகணங்களால் சிம்ம ராசிக்காரர்கள் பண விஷயத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சிலருக்கு பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குடும்ப சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
செப்டம்பர் மாதத்தில் நிகழும் 2 கிரகணங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். முடிந்தவரை சிக்கனமாக இருக்க முயற்சிக்க வேண்டும். வாழ்வில் பல சவால்களை சந்திப்பீர்கள். ராகு 4 ஆவது வீட்டை பார்ப்பதால், கஷ்டங்கள் அதிகரிக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் எந்த ஒரு நிதி முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் நிகழும் 2 கிரகணங்களால், செப்டம்பர் முதல் அடுத்த 90 நாட்கள் வரை எந்த முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். பண விஷத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் பிரச்சனையில் மூழ்க நேரிடும். இம்மாதத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பேச்சே பல பிரச்சனையில் சிக்க வைத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications