Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
500 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகியுள்ள 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு செல்வம் குவியப்போகுது...
Triple Rajyoga In Pisces On March 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கிரகங்களின் ராசி மாற்றங்களால் அவ்வப்போது ராஜயோகங்கள் உருவாகி, அதுவும் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் மார்ச் மாதத்தில் மீன ராசியில் ஒரு அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அது என்னவெனில், மார்ச் மாதத்தில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. அதுவும் இந்த 3 ராஜயோகங்களும் ஒரே மீன ராசியில் உருவாகியுள்ளன.

அதில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகமும், சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் மற்றும் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும் அடங்கும்.
இந்த 3 ராஜயோகங்களும் மீன ராசியில் ஒரே வேளையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளன. இந்த ராஜயோகங்களினால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக திடீர் பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகியுள்ள 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் 3 ராஜயோகங்களும் உருவாகியுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். சிறப்பான செயல்திறனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அரசு வேலை செய்பவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் 3 ராஜயோகங்களும் உருவாகியுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் 3 ராஜயோகங்களும் உருவாகியுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களின் பண வரவு அதிகரிக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல முக்கியமாக வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஜோதிடத்தின் படி, எப்போது ஒரு ராசியில் சூரியனும், புதனும் ஒன்றிணைந்து பயணிக்கிறதோ, அப்போது புதாதித்ய ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகமானது மங்களகரமான யோகங்களுள் ஒன்று. இந்த புதாதித்ய யோகம் வெற்றி, அந்தஸ்து மற்றும் நிதி ஆகியவற்றைக் கொண்டு வரும்.
ஜோதிடத்தின் படி, எப்போது ஒரு ராசியில் சூரியனும், சுக்கிரனும் ஒன்றிணைந்து பயணிக்கிறதோ, அப்போது சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகும். இது ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகா மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜோதிடத்தின் படி, எப்போது ஒரு ராசியில் புதனும், சுக்கிரனும் ஒன்றிணைந்து பயணிக்கிறதோ, அப்போது லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். இந்த மங்களகரமான யோகம், ஒருவருக்கு மகத்தான செல்வத்தையும், முயற்சிகளில் வெற்றியையும், ஒட்டுமொத்த செழிப்பையும் வழங்கும்.



Click it and Unblock the Notifications