Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் ஒருதடவையாவது ஜெயிலுக்கு போவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பூமியில் நரகம் என்று ஒன்று இருந்தால் அது ஜெயிலில்தான் இருக்கும். குற்றவாளிகளுக்கு ஜெயில் பழகிய இடமாக இருந்தாலும் ஒரு சாமானியன் துரதிர்ஷ்டவசமாக ஜெயிலுக்கு சென்று விட்டால் அவர்களின் வாழ்க்கை நரகத்தை மோசமாக இருக்கும். ஜெயிலில் மனிதர்களை திருத்துகிறதோ இல்லையோ இனி அங்கு செல்லக்கூடாது என்ற அச்சத்தை உண்டாக்குகிறது என்பது மட்டும் உண்மை.
ஜெயிலுக்கு செல்ல வேண்டுமென்று யாருமே ஆசைபடமாட்டார்கள், ஆனால் விதிவசத்தால் சில ஜெயிலுக்குள் சென்று மாட்டிக்கொள்கிறார்கள். இப்படி ஒருவர் ஜெயிலை நோக்கி செல்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலேயோ வாழ்க்கையில் ஒரு முறையாவது ஜெயிலுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மேஷம், அவர்கள் தங்களின் அடிக்கடி மாறும் மனநிலைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்களின் ஆபத்தான மற்றும் விரைவான கோபத்தால் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
மேஷ ராசிக்காரர்கள் சற்றும் யோசிக்காமல் பிரச்சினையில் குதிப்பார்கள், சூழ்நிலைகளை பற்றி சிந்திக்காமல் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். இந்த துணிச்சல் சிறப்பானதாக இருந்தாலும், அது விரும்பத்தகாத முடிவுகளுக்கு வழிவகுக்கும். கோபம் அல்லது சுவாரஸ்யத்திற்காக அவர்கள் செய்யும் சாகசங்கள் அவர்களை சிறைச்சாலையின் வாசலில் கொண்டு சென்று நிறுத்த அதிக வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தீவிர ஆர்வமும், புத்திசாலித்தனமும் கொண்டவர்கள். அவர்கள் நேரடி குற்றங்களால் ஈடுபட மாட்டார்கள், ஆனால் குற்றங்களுக்கு மூளையாக செயல்படுவார்கள். இவர்கள் பச்சோந்தி போல ஆளுமைகளை மாற்றிக்கொள்ளலாம், இதனால் அவர்கள் உண்மையில் யார் என்று அனைவரும் குழப்பிக் கொள்வார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள், ஆனால் தேவைப்படும் போது அவர்கள் மற்றவர்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடலாம். அவர்கள் வன்முறை போன்ற தீங்கிழைக்கும் குற்றங்களால் அல்ல, மாறாக ஏமாற்றுதல் மற்றும் மோசடி போன்ற குற்றங்களுக்காக சிறைக்கு செல்ல நேரிடலாம். அவர்கள் பெரிய சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகவும், சிலிர்ப்பைத் தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாகசத்தின் மீதான அவர்களின் காதல் சில சமயங்களில் சட்டத்தை மீறுவதற்கு வழிவகுக்கும். அவர்கள் பெரும்பாலும் யாருடைய விதிமுறைகளையும் பின்பற்ற விரும்புவதில்லை.
எனவே சட்டங்களை உடைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அவர்களின் செயல்கள் தங்களை எவ்வாறு சிக்கலில் சிக்க வைக்கும் என்பதை அவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சிலிர்ப்புக்கான அவர்களின் தேடல் அவர்களை சிறைச்சாலையில் தள்ளும் என்பது மட்டும் உறுதி.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தின் மிகவும் மர்மமானவர்கள். அவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் மறைத்து வைக்கும் திறமையைக் கொண்டுள்ளனர், இது குழப்பம் மற்றும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். விருச்சிகம் ராசிக்காரர்கள் ரகசியமான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் மற்றும் எந்தவொரு விஷயத்திலும் தீவிரமாக செயல்படுவார்கள்.
செவ்வாய் அல்லது கேதுவால் ஆளப்படும் அவர்கள் பழிவாங்கும் நடத்தையை நோக்கிச் செல்லக்கூடும். அவர்களின் மிகப்பெரிய எதிரியே அவர்களுடைய பழிவாங்கும் உணர்வுதான். அவர்களின் குற்றங்கள் சட்டவிரோத செயல்கள் அல்லது பழிவாங்கும் செயல்களை உள்ளடக்கியிருக்கலாம். அவர்களின் உணர்ச்சிகரமான காயங்கள் மற்றும் தேவைகள் அவர்களை சிறைச்சாலையை நோக்கி நகரத்தும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கிளர்ச்சியாளர்களாக இருப்பார்கள். அவர்களின் வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அவர்களை சில சமயங்களில் ஆபத்தானவர்களாக மாற்றலாம். பொதுவாக அறிவாற்றல் மிக்கவர்களாகவும் புதுமையானவர்களாகவும் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் சில சமயங்களில் சர்வாதிகார செயல்பாடுகளிலும், சட்ட விரோத செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். சட்ட எல்லைகளை மீறும் சமூக செயல்பாடுகள் அல்லது அரசுக்கு எதிராக கலகம் செய்வதால் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இதனால் அவர்கள் சிறைச்சாலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
